“இது விராட் கோலி பற்றி பேசற நேரம் கிடையாது சுப்மன் கில் பற்றி பேச வேண்டிய நேரம்!” – கவாஸ்கர் பரபரப்பு பேச்சு!

0
633
Gill

ஐபிஎல் தொடரில் கடந்த மூன்று ஆண்டுகளாக பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்று வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறி இருக்கிறது.

பெங்களூர் மைதானத்தில் குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் பெங்களூரு அணி தோல்வி அடைந்தது.

- Advertisement -

முதலில் விளையாடிய பெங்களூர் அணிக்கு விராட் கோலி அபாரமான சதம் அடித்த போதிலும், இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணிக்கு சுப்மன் கில் அபாரமான சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

விராட் கோலியின் டி20 எதிர்காலம் பற்றி இருக்கும் விவாதங்கள் குறித்து பேசி உள்ள கவாஸ்கர் ” நாம் பேச வேண்டியது கில் உடைய பேட்டிங் பற்றி. ஏனெனில் அவர் அழுத்தத்தில் அந்தச் சதத்தை அடித்தார். டி20 அணி தேர்வு பற்றி நாம் இப்பொழுது கவலைப்பட வேண்டியது கிடையாது. ஏனென்றால் டி20 உலக கோப்பைக்கு ஒரு வருடம் மேல் இருக்கிறது.

எனவே நாம் அது குறித்து அதிகம் கவலைப்பட வேண்டியது கிடையாது. ஞாயிற்றுக்கிழமை அந்த மனிதர் சுப்மன் கில் செய்தது மூச்சடைக்கக் கூடியது. விராட் கோலி செய்ததை விட யாராவது சிறப்பாகச் செய்தால்தான் போட்டியை வெல்ல முடியும் என்ற நிலையில் அவர் அதைச் செய்தார்.

- Advertisement -

முதலில் விளையாடிய விராட் கோலியின் இன்னிங்ஸ் நம்ப முடியாதது முற்றிலும் பயங்கரமானது. பவர் ஹிட்டிங் பற்றி பேச்சுகள் இருக்கும் பொழுது, கில் பேட்டிங் மென்மையாக இருந்தது. அவருடைய கால்கள் தவறாக எங்கும் நகரவே இல்லை. அது அவ்வளவு நேர்த்தியாக இருந்தது. அது கம்பீரமாக இருந்தது.

விராட் கோலி டி20 அணியில் இடம் பெறுவாரா என்பது குறித்து அதிகம் விவாதிப்பதை விட கில் பேட்டிங் குறித்துதான் அதிகம் பேச வேண்டும். எதிர்காலத்தைப் பார்க்க வேண்டிய காலம் இது. அந்த எதிர்காலம் சுப்மன் கில்” என்று கூறியிருக்கிறார்!