“இது பழைய ரோகித் சர்மா இல்லங்க.. இது டூப்ளிகேட்” – சோயப் அக்தர் அதிரடியான பேச்சு!

0
1264
Akthar

தற்போதைய கிரிக்கெட்டில் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆன விராட் கோலி ரோஹித் சர்மா பற்றி கூறும்பொழுது, அவரைப் போல் பேட் செய்வதற்கு அதிக டைம் இருக்கக்கூடியவர் யாரும் கிடையாது என்று சொல்லுவார். அந்த அளவிற்கு ரோகித் சர்மா பேட்டிங்கில் டைமிங் இருக்கும். அதனால் அவரது பேட்டிங் அவ்வளவு எளிமையாக நளினமாக இருக்கும்!

ரோஹித் சர்மாவின் பேட்டிங்கை புகழக் கூடியவர்கள் லேசி எலிகன்ஸ் என்று கூறுவார்கள். மிக அனாயசமாக பேட்டை சுழற்றி, பந்துக்கு பெரிய அளவில் நோகாமல் காற்றிலும் தரையிலும் பவுண்டரி எல்லைகளைக் கடக்க வைப்பவர்.

- Advertisement -

இந்தத் திறமையின் காரணமாகவே அவரால் ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று முறை இரட்டை சதத்தை பதிவு செய்ய முடிந்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் மிக அதிகபட்சமான 264 ரன்களை பதிவு செய்ய முடிந்தது.

அவர் எப்பொழுதும் ஆரம்பத்தில் கொஞ்சம் நிதானமாக ஆரம்பித்து, போகப்போக ஆடுகளத்தின் நிலவரத்தைப் புரிந்து, பந்தை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்த பிறகு வட்டியும் முதலுமாக பந்துவீச்சாளர்களை வதைக்கக் கூடியவர்.

தற்பொழுது அவருடைய இந்த அற்புதமான பேட்டிங் திறமை பாதிக்கப்பட்டு இருக்கிறது. அவரால் முன்பு போல் களத்தில் நீண்ட நேரம் நிலைத்து நிற்க முடிவதில்லை. அவருடைய ஸ்டிரைக் ரேட் அதிரடியாக உயர்ந்திருக்கிறது. ஆனால் அவருடைய ஆவரேஜ் குறைந்திருக்கிறது. மேலும் உள்ளே வரும் பந்துகளுக்கு அவருடைய தடுமாற்றம் பெரிய அளவில் மாறியிருக்கிறது.

- Advertisement -

இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தை உள்ளே கொண்டு வரும்பொழுது, அது ரோகித் சர்மாவுக்கு விளையாடுவதற்கு மிகப்பெரிய இடைஞ்சலாக இருக்கிறது. அவரால் அப்படியான பந்துகளுக்கு விக்கெட்டை காப்பாற்றி விளையாட முடியவில்லை. இது தற்பொழுது வரை ஆசியா கோப்பையிலும் ஷாகின் ஷா அப்ரிடி பந்துவீச்சில் தொடர்கிறது.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகபந்துவீச்சாளர் சோயப் அக்தர்
“இது அதே ரோகித் சர்மா இல்லை. இது ஏதோ டபுள் ரோல் போல் இருக்கிறது. முன்பு ஷாகின் அவர் மனதை வென்றது கிடையாது.

ரோஹித் சர்மா தனது பேட்டிங் ஸ்டாண்சை மாற்றி நான் இதற்கு முன் பார்த்ததில்லை. ஆனால் தற்பொழுது அவர் பேட்டிங் ஸ்டாண்சை மாற்றினார். ஷாகின் ஷா அப்ரிடி அவர் மூளைக்குள் புகுந்து விட்டார். அவருடைய ஆழ்மனதில் அவர் இருக்கிறார். இதுதான் இந்தியா பாகிஸ்தான் மோதும் பெரிய போட்டிகளில் இருக்கும் அழுத்தம்!” என்று கூறி இருக்கிறார்!