இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!.. 6 வருட தோனி சாதனையை அசால்ட்டா உடைத்த இஷான் கிஷான்!

0
194
Ishaan

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது!

இந்த தொடரில் முதல் போட்டியை இந்திய அணியும் இரண்டாவது போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணியும் வென்று இருந்த நிலையில் இன்று தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது போட்டி நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் இந்த ஆட்டத்திலும் ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் உம்ரான் மாலிக் மற்றும் அக்சர் படேல் இருவரும் நீக்கப்பட்டு, ருதுராஜ் மற்றும் உனட்கட் இருவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஆட்டத்திலும் துவக்க ஆட்டக்காரர்களாக இடது கை பேட்ஸ்மேன் இசான் கிஷான் வலது கை பேட்ஸ்மேன் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினார்கள். வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என்ற நிலையில் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

ஆடுகளம் எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்து கொண்டு அதற்குப் பிறகு இருவரும் தங்களின் ஆட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்தினார்கள். அதிரடி ஆட்டத்தில் இறங்கிய இஷான் கிஷான் 43 பந்துகளில் ஐந்து பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் அரைசதம் அடித்தார். இவருக்கு இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இது தொடர்ச்சியாக மூன்றாவது அரை சதமாகும். மேலும் டெஸ்ட் தொடரோடு சேர்த்து இது தொடர்ச்சியான நான்காவது அரைசதம் ஆகும்.

- Advertisement -

இஷான் கிஷான் இந்த அரைசதத்தின் மூலம் ஆறு வருடங்களாக மகேந்திர சிங் தோனியின் வசம் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு சாதனையை இன்று முறியடித்து இருக்கிறார். என்ன சாதனை என்றால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் இந்தியா விக்கெட் கீப்பராக மகேந்திர சிங் தோனி தொடர்ந்து இரண்டு அரைசதம் அடித்திருந்தார். தற்பொழுது இஷான் கிஷான் தொடர்ச்சியாக மூன்று அரைசதங்கள் அடித்ததின் மூலம் முறியடித்து இருக்கிறார்.

மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் தொடர்ச்சியாக மூன்று முறை அரைசதத்திற்கு மேலாக அடித்த ஐந்தாவது இந்திய வீரராக இசான் கிஷான் இணைந்து இருக்கிறார். இந்த பட்டியலில் கங்குலி, ரகானே, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய நால்வர் இருக்கிறார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் உலகக் கோப்பையை மனதில் வைத்து வாய்ப்பு தரப்பட்டதில், தற்போது வரை அதை மிகச்சிறப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளது இஷான் கிஷான்தான். மேலும் கேஎல்.ராகுல் அணிக்கு வந்த பிறகு இரண்டாவது விக்கெட் கீப்பராக இவரே இந்திய உலகக்கோப்பை அணியில் தேர்வாக அதிக வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது.