விராட் கோலி சொந்த சாதனைகளுக்கு விளையாட இது இடம் கிடையாது- சைமன் டால் கடுமையான விமர்சனம்!

0
401
Viratkohli

இன்று ஐபிஎல் 16 வது சீசனின் 15ஆவது போட்டி பெங்களூர் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே பெங்களூர் மைதானத்தில் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது!

இந்த போட்டியில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் பாப் மற்றும் விராட் கோலி இருவரும் நல்ல துவக்கம் தந்தார்கள். குறிப்பாக விராட் கோலி மிகச் சிறப்பான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

ஜெயதேவ் உனட்கட் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் பொறுமை காட்டிய விராட் கோலி அடுத்து ஆவேஸ் கான் வீசிய இரண்டாவது ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி எடுத்து அதிரடி ஆரம்பித்தார்.

இதற்கு அடுத்து குர்னால் பாண்டியா ஓவரிலும் பவுண்டரிகளை பறக்க விட்டார். பவர் பிளேவின் இறுதி ஓவரை வீச வந்த மார்க் வுட்டின் ஓவரில் அபாரமான ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் விராட் கோலியின் பேட்டில் இருந்து பறந்தது.

ஆறு ஓவர்களின் முடிவின்போது விக்கெட் இழப்பில்லாமல் பெங்களூரு அணி 56 ரன்கள் எடுத்திருந்தது. இதில் விராட் கோலி மட்டும் 25 பந்தில் 42 ரன்கள் எடுத்திருந்தார். ஐபிஎல் பவர் பிளேவில் அவரது சிறப்பான செயல்பாடு இதுவாகும்.

- Advertisement -

பவர் பிளே முடிந்து அடுத்து விராட் கோலி 50 ரன்களை எட்ட எட்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அதற்கு 10 பந்துகள் எடுத்துக் கொண்டார். இதனால் நடு ஓவரில் பெங்களூர் அணிக்கு ரன் ரேட் பாதிக்கப்பட்டது. பத்து ஓவர்களின் முடிவில் 100 ரன்களை எட்ட வேண்டிய பெங்களூர் அணி 87 ரன்கள் மட்டும் எடுத்திருந்தது.

விராட் கோலியின் இந்த ஆட்ட அணுகுமுறை குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டால் கடுமையான ஒரு விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

விராட் கோலியின் இந்த இன்னிங்ஸ் குறித்து பேசி உள்ள அவர் ” விராட் கோலி 42 ரன்களில் இருந்து 50 ரன்களுக்கு போக மேற்கொண்டு பத்து பந்துகளை எடுத்துக் கொண்டார். இங்கு தனிப்பட்ட நபர்களின் சொந்த சாதனைகளுக்கு எல்லாம் இந்த வடிவ கிரிக்கெட்டில் இடமில்லை என்று நான் நினைக்கிறேன்!” என்று கடுமையாக விமர்சித்து உள்ளார்!