“ஓபனா சொல்றன்.. என் டார்கெட் இதுதான்.. ஆனா அவசரப்படல” – சிவம் துபே பேட்டி!

0
71
Shivam

ஐபிஎல் தொடர் இந்திய கிரிக்கெட்டை மட்டும் அல்லாமல் உலக கிரிக்கெட்டையும் பாதிப்பதாக முன்பு பலராலும் புகார் சொல்லப்பட்டு வந்தது. உலக கிரிக்கெட்டின் அட்டவணையை ஐபிஎல் பாதிப்பதால் இப்படியான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

ஆனால் இன்று உலக கிரிக்கெட்டில் பல பிரான்சிஸைஸ் டி20 லீக்குகள் நடத்தப்பட்டு உலக கிரிக்கெட் செழுமையாக இருப்பதற்கும், இந்திய கிரிக்கெட்டில் எக்கச்சக்க இளம் திறமைகள் கண்டறியப்பட்டு, இந்திய அணிக்குள் வருவதற்கும் ஐபிஎல் தொடர் மிக முக்கியமான காரணியாக இருக்கிறது.

- Advertisement -

நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் போது மாற்று வீரரே இல்லாத வீரராக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹரிதிக் பாண்டியா இருந்தார். மிகச் சரியாக அவர் அந்தத் தொடரில் காயமடைந்து வெளியேற, அவருக்கு மாற்று வீரரே இல்லாமல் இந்தியா கடைசி வரை ஏழு பேட்ஸ்மேன்கள் உடன் மட்டுமே விளையாடியது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு பெற்ற மிதவேக பந்துவீச்சு ஆல் ரவுண்டர் சிவம் துபே பந்துவீச்சில் சிறப்பாக ஒரு விக்கெட் கைப்பற்றியதோடு, பேட்டிங்கில் 40 பந்துகள் சந்தித்து 60 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியையும் உறுதி செய்து களத்தில் நின்று அசத்தினார். இதனால் தற்பொழுது ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக இவரை திடீரென பார்க்கும் அளவுக்கு சூழ்நிலை மாறியிருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து சிவம் துபே பேசும்பொழுது “அணியில் விளையாடும் எந்த வீரரும் உலகக் கோப்பையில் விளையாடுவதையே முக்கிய குறிக்கோளாக வைத்திருப்பார்கள். என் மனதிலும் உலகக் கோப்பையில் விளையாடுவதே முக்கிய லட்சியமாக இருக்கிறது. ஆனால் உலகக்கோப்பை தொடர் வெகு தொலைவில் இருக்கிறது. இப்போது நான் நாளைய ஆட்டத்தை விளையாடுவதையும், ஒரு போட்டியை போட்டியாக எடுத்துக் கொள்வதையும் மட்டுமே இலக்காக வைத்திருக்கிறேன்.

இரண்டு போட்டிகள் மட்டுமே இன்று உள்ளதால் நமக்கு இது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும். ஐபிஎல் ஒரு பெரிய தளம் அங்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டால் தேசிய அணிக்கு தேர்வாக முடியும்.

ஒரு அணிக்கு என்று திட்டமிடலும் காம்பினேஷனும் இருக்கிறது. நாங்கள் எவ்வளவு அதிகமாக டி20 கிரிக்கெட் விளையாடுகிறோமோ அது எங்களுக்கு நல்லது. ஏனென்றால் நாங்கள் இந்த வடிவத்தை அவ்வளவு நன்றாக புரிந்து கொள்வோம்.

உங்கள் வழியில் விஷயங்கள் நடக்காத பொழுது எல்லாம் கடினமாக மாறுகிறது. அப்பொழுது உங்களால் செய்ய முடியாத விஷயங்களை யோசிக்க முடியாது. நான் அப்பொழுது நான் செய்த விஷயங்களை யோசித்தேன். நான் பயிற்சி செய்து ஒவ்வொன்றையும் செயலாக மாற்றிக் கொண்டேன். மேலும் நான் என் திறமையில் உழைத்ததை விட உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் உழைத்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -