10 டீமுக்கும் இதான் என்னோட ரேட்டிங்! – ஸ்காட் ஸ்டைரிஸ் அதிரடி!

0
130
IPL2023

உலகின் மிக வெற்றிகரமான டி20 லீக் ஐபிஎல் தொடரின் 16வது சீசன், இன்று மாலை உலகில் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் மைதானத்தில், கடந்த ஆண்டு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும், அதற்கு முன் ஆண்டு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே இன்னும் சற்று நேரத்தில் துவங்க இருக்கும் போட்டியின் மூலம் ஆரம்பிக்க இருக்கிறது!

இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் முதுகுப்பகுதியில் காயம் அடைந்ததால் விளையாட முடியாததால் நிதிஸ் ரானா புதிய கேப்டனாக வந்திருக்கிறார். ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி குணமடைந்து வருவதால் டெல்லி அணிக்கு வார்னர் கேப்டனாக இருக்கிறார். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எய்டன் மார்க்ரம் கேப்டன் ஆகி இருக்கிறார். பஞ்சாப் அணிக்கு தவான் புதிய கேப்டனாக வந்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் இந்த ஐபிஎல் தொடரில் வீரர்கள் யாரும் காயமடையாத அணியாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் இருக்கிறது. நட்சத்திர வீரரை இழந்த அணியாக கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் இருக்கின்றன. மும்பை அணியில் பும்ரா விளையாடவில்லை.

இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும் தற்போது தொலைக்காட்சி கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரீஸ் இந்த தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளையும் வலிமையான பிளேயிங் லெவன் அடிப்படையில் மதிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் அவர் பத்து அணிகளைத் தரவரிசை படுத்தியதோடு, இதற்கு எதிர்வினையாக ரசிகர்கள் தாராளமாக என் மீது விமர்சனத்தை வைத்து தாக்கிக் கொள்ளலாம் என்று நகைச்சுவையாக ட்வீட் செய்தும் இருக்கிறார். அவர் மதிப்பெண் அடிப்படையில் வரிசைப்படுத்திய பத்து ஐபிஎல் அணிகளை கீழே பார்க்கலாம்.

- Advertisement -
  1. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  2. லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்
  3. பஞ்சாப் கிங்ஸ்
  4. சென்னை சூப்பர் கிங்ஸ்
  5. மும்பை இன்டியன்ஸ்
  6. சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
  7. ராஜஸ்தான் ராயல்ஸ்
  8. குஜராத் டைட்டன்ஸ்
  9. டெல்லி கேப்பிடல்ஸ்
  10. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்