“விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட்டை விட இதுதான் முக்கியமானது” – சுரேஷ் ரெய்னா விளக்கம்

0
371
Raina

வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் சார்பில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இடம் பெற்று விளையாடுவது உறுதியாகி இருக்கிறது.

இந்த நிலையில் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடும் அட்டாக்கிங் பேட்டிங் முறையை ரோஹித் சர்மா தொடர்ச்சியாக பின்பற்றி வருகிறார். ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அவர் என்ன செய்தாரோ அதையேதான் டி20 உலகக்கோப்பை தொடரிலும் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதே சமயத்தில் இந்திய டி20 அணிக்கு திரும்பி இருக்கும் விராட் கோலியும் அதிரடியான முறையிலேயே விளையாட விரும்புகிறார். நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் விளையாடிய விராட் கோலி 16 பந்தில் 29 ரன்களை அட்டாக்கிங் பேட்டிங் என்கின்ற அணுகுமுறையிலேயே எடுத்தார்.

தற்பொழுது விராட் கோலி மெதுவான ஆடுகளங்களை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் அதிரடியான முறையில் விளையாட வேண்டுமா? என்பது விவாதமாக மாறி இருக்கிறது.

இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில் “டி20 உலகக் கோப்பை திட்டங்களுக்கு விராட் கோலி இந்திய அணிக்கு மிக முக்கியமானவராக இருப்பார். தற்பொழுது விராட் கோலி மூன்றாவது இடத்தில் விளையாட தயாரா இருக்கிறாரா? என்பதுதான் கேள்வி? அந்த இடத்தில் விளையாடுவதற்கு ரோகித் சர்மாவும் விரும்புகிறார். மேலும் ரோகித் சர்மா முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாட நினைக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி அதிரடியான முறையிலேயே விளையாட நினைக்கிறார். ஆனால் விராட் கோலியை சுற்றி இருப்பவர்கள் அதிரடியாக விளையாட வேண்டும் விராட் கோலி அப்படி விளையாடக் கூடாது. அவர் ஆட்டத்தை நகர்த்தி எடுத்துச் செல்ல வேண்டும். அவர் அப்படியான வீரர். எப்பொழுது வேண்டுமானாலும் பவுண்டரி சிக்ஸர் அடிக்க முடியும்.

நடைபெற இருக்கும் உலக கோப்பையில் விராட் கோலி மத்தியில் வந்து நீண்ட நேரம் நிற்க வேண்டும். இதுதான் அவரது ஸ்ட்ரைக் ரேட்டை விட முக்கியமானது. அவர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் 765 ரன்கள் குவித்ததை பார்த்தோம்.

டி20 உலக கோப்பை நடக்கும் ஆடுகளங்களில் அவர் இப்படி விளையாட வேண்டியது அவசியம். அங்கு மிஸ்டரி ஸ்பின்னர்கள் வந்து ஆடுகளமும் அவர்களுக்கு உதவ கொஞ்சம் பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும். இந்த இடத்தில் பௌண்டரி அடிக்க முடியாவிட்டால் வேகமாக ஓடி ரன்கள் எடுக்க வேண்டும். எனவே இந்திய அணியில் முதல் மூன்று பேரில் ஒருவர் 20 ஓவர்கள் முழுமையாக விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.