“கோலியின் பிரச்சனை இதுதான்.. அதை சரி பண்ண இதையெல்லாம் செஞ்சாரு!” – இர்பான் பதான் வெளியிட்ட ஆச்சரியமான தகவல்கள்!

0
208
Irfan

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடர் வரைக்கும், 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருந்து விராட் கோலியின் பேட்டிங்கில் பெரிய சரிவு உண்டாகிய இருந்தது. இது அவர் மட்டும் இல்லாமல் யாருமே நம்ப முடியாத ஒரு விஷயம்.

அந்த ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டி20 வடிவத்தில் சதம் அடித்து விராட் கோலி பேட்டிங்கில் மீண்டும் திரும்பி வந்தார். அவர் பேட்டிங்கில் விட்ட பார்மை மீட்கும் வரையில், இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்று மொத்தமாக வெளியே தெரிந்தது. அந்த அளவுக்கு அவர் இந்திய பேட்டிங் யூனிட்டை தூக்கி சுமந்தவராக இருந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து அவருக்கு சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் சதம் வந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் சதம் வந்தது. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அவருக்கு வெளிநாட்டு டெஸ்ட் சதம் வந்தது. இப்படி அவர் முழுமையாக ஃபார்ம் சரிவிலிருந்து தற்பொழுது மீண்டு வந்திருக்கிறார்.

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு ஒரு பிரச்சினையாக இருந்து வந்தது இடது கை சுழற்பந்து மற்றும் லெக் ஸ்பின். இந்த இரண்டு வகை சுழற் பந்துவீச்சிலும், அவர் குறிப்பிட்ட காலகட்டத்தில் அடிக்கடி தன் விக்கட்டை மிக எளிமையாக கொடுத்துக் கொண்டிருந்தார்.

தற்பொழுது விராட் கோலி இந்தப் பிரச்சனைக்கு கவனம் கொடுத்து அதற்கேற்றபடி தன்னுடைய பேட்டிங்கை மாற்றி அமைத்து வருகிறார். சமீபத்தில் பெங்களூர் ஆலூரில் நடைபெற்ற ஆறு நாட்கள் பயிற்சி முகாமில் அவர் இந்த பிரச்சனைக்கான மாற்று வழியை கண்டறிந்து பயிற்சி செய்தார்.

- Advertisement -

இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இர்ஃபான் பதான் “விராட் கோலி தன் பிரச்சனையைக் கண்டுபிடித்திருக்கிறார். அதற்கான தீர்வையும் வழியையும் கண்டுபிடித்திருக்கிறார். ஒரு பெரிய வீரர் எப்பொழுதும் இதைத்தான் செய்வார். அவருடைய பிரச்சினை என்னவென்று அவருக்குத் தெரியும்.

இடது கை சுழற் பந்துவீச்சு மற்றும் லெக் ஸ்பின் இரண்டும் அவருடைய பிரச்சனை. இதனால்தான் அவர் அதிகம் கால்களை பயன்படுத்தி விளையாடுகிறார். பின்பு கிரீசை பயன்படுத்தி, பேக் புட்டில் அக்ராஸ் ஷார்கள் விளையாடி பயிற்சி எடுக்கிறார்.

வலையில் அவர் எடுக்கும் பயிற்சிகள் எல்லாமே, அவர் சந்திக்க இருக்கும் பவுலிங் யூனிட்டுக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவருக்கு தெரியும். பாகிஸ்தான் அணிக்கு எதிராக மட்டுமல்ல மற்ற அணிகளுக்கு எதிராகவும் சுழற் பந்துவீச்சை சந்தித்தாக வேண்டும். நீங்கள் இலங்கையில் அதிகம் சுழற் பந்துவீச்சை எதிர்த்துதான் விளையாட வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!