“இது தொடக்கம்தான் போகப் போக பாருங்கள் எங்கள் ஆட்டத்தை”- கேகேஆர் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் !

0
134

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இன் 16 வது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒன்பது ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் குஜராத் அணி முதல் இடத்திலும் பஞ்சாப் அணி இரண்டாம் இடத்தில் உள்ளன. மும்பை மற்றும் டெல்லி அணியை தவிர மீதமுள்ள எல்லா அணிகளும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருக்கின்றன.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த வருடம் புதிய பயிற்சியாளர் உடன் களமிறங்கியது. இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டின் பிரபல பயிற்சி ஆளான சந்திராகாந்த் பண்டிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அந்த அணி தனது முதல் போட்டியில் தோல்வியடைந்தாலும் நேற்று பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக ஆடி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

2021 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர்களின் போது முதல் பாதியில் சொதப்பி வந்த கொல்கத்தா அணி இரண்டாவது பாதியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டி வரை முன்னேறியது. கடந்த சீசனில் முதல் சில போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும் பிற்பகுதியில் தொடர் தோல்விகளை சந்தித்து பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.

ஐபிஎல் தொடர்களில் பெரும்பாலும் சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் வெளிநாட்டு பயிற்சியாளர்களுமே அணிகளுக்கு நியமிக்கப்பட்டு வந்த நிலையில் சந்திரகாந்த் பண்டிட் முதன்முதலாக கொல்கத்தா அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். ரஞ்சிப் போட்டிகளில் விதர்பா அணி இரண்டு முறை கோப்பையை வெல்ல காரணமானவர். இவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட நாளிலிருந்து கொல்கத்தா அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. முதல் போட்டியில் பஞ்சாப் அணியுடன் தோல்வி அடைந்தாலும் பெங்களூர் அணியுடன் கொல்கத்தா அணி ஆடிய விதம் அதன் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் போட்டிக்கு பின் ஸ்டார் தொலைக்காட்சியில் பேசிய பயிற்சியாளர் சந்திராக்கன் பண்டிட் “முதல் வெற்றி என்றுமே மகிழ்ச்சியான ஒன்று. இந்த வெற்றி எங்களது கேரக்டரை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. என்பது ஆண்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்த பின்பு 200 ரண்களை குவிப்பது என்பது அசாத்தியமான ஒரு விஷயம். அதனை சருதுல் மற்றும் ரிங்கு நிகழ்த்திக்காட்டி உள்ளனர் என்று பாராட்டினார். அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை வருண் மற்றும் சுனில் நரேன் சிறப்பாக பந்துவீசி பெங்களூர் அணியை நெருக்கடிக்கு உள்ளாக்கினர். அணியின் அறிமுக வீரரான சூயாஸ் சர்மா மிகச் சிறப்பாக பந்து வீசினார். அவரை பயிற்சி போட்டிகளின் போதே பார்த்தேன் அவரது பந்து வீசித் திறன் நன்றாக இருக்கிறது அனுபவம் இல்லை என்றாலும் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் போட்டியை எதிர்கொள்கிறார். என்று தெரிவித்தார். தற்போது தொடரின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் கே கே ஆர் அணி இன் திட்டங்கள் தொடர்ச்செல்லச் செல்ல தெரியும் எனவும் தெரிவித்தார் சந்திரகாந்த் பண்டிட்.

- Advertisement -