விராட் கோலியின் கேப்டன்சி சாதனைகளை இப்படித்தான் பார்க்க வேண்டும்” – பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட்!

0
348

இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி 2021 ஆம் ஆண்டின் டி20 உலக கோப்பையின் தோல்விக்கு பிறகு தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். 2022 ஆம் ஆண்டின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது அவர் டெஸ்ட் போட்டிக்கான அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகினார். 2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் போது இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக பதவியேற்றார் கோலி.

ஏழு ஆண்டுகள் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் ஆகப் பதவி வகித்த அவரது தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா வெஸ்ட் இண்டீஸ் என உலகின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று டெஸ்ட் போட்டிகளில் வெற்றி கொடி நாட்டியது. இந்திய கேப்டன்களிலேயே மிகவும் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக விளங்கினார் விராட் கோலி. ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான்களான ஸ்டீவ் வாக் டான் பிராட்மேன் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிகமான வெற்றிகளை பெற்றுள்ள கேப்டன் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆனால் விராட் கோலியின் தலைமையிலான இந்திய அணி ஐசிசி போட்டிகளில் எந்த ஒரு கோப்பையையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக விராட் கோலி ஒரு வெற்றிகரமான கேப்டன் இல்லை என்ற கருத்தை சிலர் முன்வைத்து வருகின்றனர். இதற்கு தனது யூடியூப் சேனலின் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் .

இது குறித்து தனது சேனலில் பேசி இருக்கும் அவர் ” கிரிக்கெட்டை பற்றிய அடிப்படை புரிதல் இல்லாதவர்கள் தான் ஒரு கேப்டன் எவ்வளவு ஐசிசி கோப்பையை வென்று இருக்கிறார் என்பதை வைத்து ஒருவரது தகுதியை முடிவு செய்வார்கள். நீங்கள் ஒரு வெற்றிகரமாக கேப்டனாக இருந்து நல்ல யுக்திகளுடன் கூடிய கேப்டனாக இருந்தும் பெரிய போட்டிகளில் கோப்பைகளை வெல்லவில்லை என்றாலும் நீங்கள் சிறந்த கேப்டன்” தான் என குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் இதுபற்றி தொடர்ந்து பேசிய சல்மான் பட் ” உலகக்கோப்பை போன்ற மிகப்பெரிய போட்டிகளில் சில தவறுகள் நடந்திருக்கலாம். அல்லது நீங்கள் அதிர்ஷ்டசாலி இல்லாமல் இருக்கலாம். அதற்காக நீங்கள் பெற்ற வெற்றிகளை புறம் தள்ளி விட முடியாது. ஐசிசி போட்டிகளில் கோப்பைகளை வெல்லவில்லை என்பதற்காக விராட் கோலியை ஒரு சிறந்த கேப்டன் இல்லை என்று நாம் கூற முடியாது”என அவர் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இதனைப் பற்றி விரிவாக பேசிய சல்மான் பட் ” டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பெற்ற வெற்றிகள் மற்றும் இந்திய அணியை விராட் கோலி வழிநடத்திய விதம் ஆகியவை அவர் ஒரு சிறந்த கேப்டன் என்பதற்கு சான்றுகள். அவரது தலைமையின் கீழ் தான் இந்திய அணி வெளிநாடுகளுக்குச் சென்றும் ஆதிக்கம் செலுத்தியது என்பதை மறந்து விடக்கூடாது” என கூறி முடித்தார்.