டெஸ்ட் தொடரை வெல்ல இப்படித்தான் போகணும் – கவாஸ்கர் இந்திய அணிக்கு புதிய ஆலோசனை!

0
430
Gavaskar

பங்களாதேஷ் அணி 2-1 என்ற கணக்கில் ஒரு நாள் போட்டி தொடரை வெற்றி பெற்ற நிலையில் இந்தியா தனது வலிமையான அணியை களம் இறக்கி மூன்றாவது ஒருநாள் போட்டியை வெற்றி பெற்று அந்த நம்பிக்கையுடன் டெஸ்ட் தொடரை எதிர்கொள்ள வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார் ..

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி தொடரில் மெஹதி ஹசனின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று பங்களாதேஷ் அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் ‘கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டும்” என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இரண்டாவது ஒருநாள் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா அணி ஐந்து ரண்களில் தோல்வியை தழுவியது அதன் பிறகு ‘சோனி ஸ்போர்ட்ஸ்’ தொலைக்காட்சியில் பேசிய கவாஸ்கர் “இந்திய அணி தொடரை இழந்த போதும் அவர்கள் தங்களது வலிமையான அணியை களம் இறக்கி கடைசி ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற வேண்டும் அது அவர்கள் இழந்திருக்கும் நம்பிக்கையை புதுப்பிக்க உதவும் இந்த ஒரு நாள் தொடருக்குப்பின் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு செல்வதற்கு இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடர் இந்திய அணிக்கு இன்றியமையாதது அதனால் இந்திய அணி கடைசி போட்டியில் போராடி வெற்றி பெற வேண்டும்” என்று கூறினார் .

இது பற்றி மேலும் பேசிய கவாஸ்கர் “கேப்டன் ரோஹித் சர்மா வேதபந்துவீச்சாளர் குல்திப் சென் மற்றும் ஆல் ரவுண்டர் தீபக் சகர் ஆகியோர் காயமடைந்துள்ள நிலையில் இந்திய அணி தங்களால் இயன்ற வலுவான அணியை களம் இறக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது ஒருநாள் போட்டியில் இருந்து டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் இருந்தாலும் இரண்டு போட்டிகளிலும் விளையாடக்கூடிய வீரர்களுக்கு இந்த வெற்றி ஒரு நம்பிக்கையை அளிக்கும்.”

பங்களாதேஷ் அணி இந்த தொடரில் டேட்டிங் பௌலிங் மற்றும் பில்டிங் என அனைத்து துறைகளிலும் திறம்பட செயல்பட்டு வருகிறது அதனால் இந்த இறுதி போட்டியில் இந்தியாவுக்கு கிடைக்கும் வெற்றியானதுஅவர்கள் டெஸ்ட் போட்டியை நம்பிக்கையுடன் அணுக உதவியாக இருக்கும் என்று கூறினார்.

- Advertisement -

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இந்திய அணிக்கு இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.