“நாளை இந்திய அணி இப்படித்தான் களமிறங்க வேண்டும்!” – ஆகாஷ் சோப்ரா அதிரடி கருத்து!

0
809
ICT

இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை ஆக்லாந்து நகரின் ஈடன் பார்க் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது . இந்தப் போட்டிக்கான அணி தேர்வு குறித்து கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களுடைய கணிப்பை வெளியிடத் துவங்கிவிட்டனர் .

இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரரும் இந்நாள் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ராவும் தன்னுடைய உத்தேச அணியை அவருடைய யூடியூப் சேனலில் வெளியிட்டு பேசியுள்ளார் . அதில் அவர் ரிஷப் பண்டையும் சஞ்சீவ் சாம்சனையும் ஆடும் லெவனில் இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார் .

- Advertisement -

நாளை நடைபெற இருக்கும் போட்டியின் அணி தேர்வு குறித்து பேசியுள்ள அவர் துவக்க வீரர்களாக ஷிகர் தவானும் சுப்மன் கில் களம் இறங்குவார்கள். அவர்களைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் மூன்றாவது வீரராக ஆடுவார். ஸ்ரேயாஸ் ஐயருக்கு சாட் பந்துகளை எதிர்கொள்வதில் சிக்கல்கள் இருந்தாலும் ஒரு நாள் போட்டிகளின் பார்ம் நன்றாக இருப்பதினால் அவர் அணியில் இடம் பெறுவார் . அவரைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் இந்திய அணியின் ஃபார்மில் உள்ள சூரியகுமார் யாதவும் ஐந்தாவதாக இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட் ஆடுவார்கள்”

இவர்களைத் தொடர்ந்து “சஞ்சு சம்சன் ஆறாவது இடத்தில் பினிஷர் ஆக ஆட வேண்டும்” என்று கூறினார் . மேலும் அவர் கூறும்போது சஞ்சு சாம்சன் எல்லா விதமான ஷார்ட்டுகளும் வைத்திருக்கக் கூடிய ஒரு வீரர் ஆட்டத்தின் சூழ்நிலைக்கு தக்கவாறு அவரால் அதிரடியாகவும் ஆட முடியும் மற்றும் அணியின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விக்கெட்டை தற்காத்தும் ஆட முடியும் இதனை அவர் தென்ஆப்பிரிக்க இந்திய அணிகளின் தொடரின் போதே நிரூபித்தார்” என்றும் கூறினார் .

மேலும் இந்திய அணி பற்றி கூறியவர் “ஏழாவது எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடங்களில் முறையே வாஷிங்டன் சுந்தரும் , சர்துல் தாக்கூர், தீபக்சகார் ஆகியோர் ஆட வேண்டும் இதன் மூலம் இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிக நீண்டதாகவும் அணியின் பேலன்ஸ் சமமாக இருக்கும்” என்று தெரிவித்தார் .

- Advertisement -

“அணியின் பத்தாவது மற்றும் பதினொன்றாவது வீரர்களாக யுசேந்திர சகலும் அர்ஷதிப் சிங் ஆட வேண்டும்” என்று கூறினார்.

சஞ்சு சம்சன் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் ஆடுவது தான் அணிக்கு பலமாக அமையும் . மிடில் ஆர்டரில் ஒரு இடது கை ஆட்டக்காரரும் வலது கை ஆட்டக்காரரும் ஆடுவது அணிக்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமையும் என்று தெரிவித்தார் .

சஞ்சு சம்சன் பற்றி பேசுகையில் “நடந்து முடிந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சஞ்சு சாம்சன் மிடில் ஆடரில் மிகத் திறமையாக செயல்பட்டார் அவர் சூழ்நிலைகளுக்கு தக்கவாறு ஆடினார் மேலும் சஞ்சு சம்சன் அந்த மூன்று போட்டிகளிலும் ஒரு போட்டியில் கூட ஆட்டம் இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது” என்று கூறி முடித்தார் ,