11 முறை சேஸிங்கில் 10 வெற்றி.. அடிக்கிற முதல் அடி நம்மளோடதா தான் இருக்கணும், இதான் என்னோட கேப்டன்ஷி ஸ்டைல் – குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டி!

0
187

குஜராத் டைட்டன்ஸ் அணி சேஸிங்கில் வெற்றிகரமான அணியாக திகழ்ந்து வருவதற்கு என்ன காரணம் என்பதை பேட்டியில் தெரிவித்துள்ளார் ஹர்திக் பாண்டியா.

நடைபெற்று வரும் ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி மைதானத்தில் நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல்s மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

- Advertisement -

பவர் பிளே ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு இரண்டு விக்கெட் கைப்பற்றினர். மிடில் ஓவர்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்தனர். டெல்லி அணி இறுதியில் 162 மட்டுமே அடித்தது.

இதை 18.1 ஓவரில் சேஸ் செய்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ் அணி. இதுவரை 11 போட்டிகளில் சேசிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்று மிகச் சிறந்த ரெக்கார்ட்டை சேஸிங்கில் வைத்திருக்கிறது.

சேஸிங்கில் ஹர்திக் பாண்டியாவின் அணுகுமுறை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய தினம் போட்டி முடிந்த பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த ஹர்திக் பாண்டியாவிடம் கேப்டன்ஷிப் அணுகுமுறை மற்றும் சேசிங்கில் சிறந்த ரெக்கார்டு வைத்திருப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர்,

“அணியில் ஒவ்வொரு வீரருக்கும் முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டு வருகிறது. எந்த நேரத்திலும் அவர்களது இயல்பான ஆட்டத்தை களத்தில் சென்று வெளிப்படுத்த அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.

நான் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை கொடுக்கத் தேவையில்லை. ஒவ்வொருவரும் ப்ரொபஷனல் கிரிக்கெட் வீரர்கள் அவர்களுக்கு சூழலுக்கு ஏற்ப எப்படி செயல்பட வேண்டும் என்று தெரியும்.

சாய் சுதர்சன் தானாக பொறுப்பு ஏற்றுக்கொண்டு அபாரமாக செயல்பட்டார். அவரை போல தான் ஒவ்வொருவரும் செயல்பட்டு வருகிறோம்.

மேலும் எனது கேப்டன்ஷிப் அணுகுமுறை எப்படி எனில் எதிரணி நமக்கு பஞ்ச் கொடுப்பதற்கு முன்னர் முதல் பஞ்ச் என்னுடைய இருக்க வேண்டும் என்று நினைப்பேன். சேசிங் செய்யும்பொழுது போதிய வரை பவர்பிளே விக்கெட்டுகள் அதிகமாக எடுக்க வேண்டும் என்பது எனது திட்டமாக இருக்கும். அதை பவுலர்கள் செய்து கொடுக்கிறார்கள். சில நேரங்களில் நானும் பவர் பிளே ஓவர்களில் பந்து வீசுகிறேன்.

ரெக்கார்ட் செய்வதற்காக நாங்கள் விளையாடவில்லை. போட்டிக்கு என்ன தேவை என்பதை வெளிப்படுத்துகிறோம். மற்றதெல்லாம் தானாக நடக்கிறது.” என்று சிறப்பாக பேசினார்.