“உலக கோப்பையில் இப்படித்தான் விக்கெட்டுகளை அள்ளுறேன்!” – முகமது சமி மாஸ் இன்பர்மேஷன்!

0
539
Shami

நடப்பு உலகக்கோப்பை இந்திய அணியில் எல்லா வீரர்களுக்கும் மாற்று வீரர்கள் இருக்கிறார்கள். விராட் கோலிக்கும் கூட மாற்று வீரர் இருக்கிறார்.

ஆனால் மாற்று வீரர் இல்லாத வீரராக வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்திய உலகக்கோப்பை அணியில் இடம் பெற்று இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இப்படியான முக்கியத்துவம் கொண்ட ஹர்திக் பாண்டியா பங்களாதேஷ் அணிக்கு எதிராக காலில் காயமடைந்து வெளியேறி, காயம் குணமடைய நாட்கள் எடுக்கும் என்பதால் உலகக் கோப்பை தொடரை விட்டு மொத்தமாக வெளியேறினார்.

இந்த நேரத்தில் ஹர்திக் பாண்டியாவின் வெளியேற்றம் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும் என்று பல கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள்.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவின் ஒரு இடத்தை நிரப்புவதற்கு இரண்டு வீரர்களை மாற்ற வேண்டியதாக இருந்தது. சர்துல் தாக்கூர் வெளியேற்றப்பட்டு, முகமது சமி மற்றும் சூரியகுமார் யாதவ் இருவர் உள்ளே கொண்டுவரப்பட்டார்கள்.

- Advertisement -

இப்படி திடீர் மாற்றம் ஏற்பட்டு இந்திய அணி கொஞ்சம் பின்தங்கி இருந்த வேளையில், முகமது சமியின் வருகை இந்திய அணியை இன்னும் பலமிக்கதாக மாற்றியது. அவர் தனது பந்துவீச்சில் கொத்துக்கொத்தாக விக்கெட்டுகளை கைப்பற்றி வருகிறார்.

இதுவரையில் ஆறு போட்டிகளில் மட்டுமே விளையாடி 23 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் பல சாதனைகளை அவர் படைத்திருக்கிறார். கடைசியாக அரை இறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக ஏழு விக்கெட் கைப்பற்றி புதிய சாதனையை படைத்தார்.

இந்த நிலையில் உலகக் கோப்பையில் தான் எப்படி விக்கெட்டுகளை கைப்பற்றுகிறேன் என்று கூறியுள்ள அவர் “கண்டிஷன் எப்படி இருக்கிறது?பந்து ஆடுகளத்தில் எவ்வாறு நடந்து கொள்கிறது? ஸ்விங் இருக்கிறதா? இதையெல்லாம் முதலில் பார்ப்பேன். இதைப் பொறுத்துதான் நான் என்னுடைய பந்துவீச்சு வியூகத்தை அமைக்கிறேன்.

மேலும் பந்து ஸ்விங் ஆகவில்லை என்றால், நான் ஸ்டம்ப் டு ஸ்டம்ப்வீச முயற்சி செய்கிறேன். அப்பொழுது பந்தை பேட்ஸ்மேன்கள் விளையாடும் பொழுது எட்ஜ் எடுக்கும் விதமாக, குறிப்பிட்ட இடத்தில் தொடர்ச்சியாக பிட்ச் செய்கிறேன். இதன் காரணமாக விக்கெட்டுகள் வருகிறது!” என்று கூறியிருக்கிறார்!