“கவலைப்படாதிங்க.. இன்னைக்கு மேட்சுக்கு இப்படிதான் தயாராகி இருக்கேன்” – சுப்மன் கில் மாஸ் அப்டேட்!

0
641
Gill

ஆசியக்கோப்பையின் இரண்டாவது சுற்று முதல் போட்டி பாகிஸ்தான் லாகூர் மைதானத்தில் பங்களாதேஷ் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

இந்த ஒரு போட்டிக்கு அடுத்து மீதமுள்ள எல்லாப் போட்டிகளும் இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடக்கிறது. மழையின் காரணமாக வேறெங்காவது மாற்றுவதற்கு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு பின்பு அந்த முடிவுகள் கைவிடப்பட்டன.

- Advertisement -

மேலும் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டு, மற்ற அணிகளுக்கு அப்படி அறிவிக்கப்படாததால் அதுவும் சர்ச்சையாகி இருக்கிறது. இதற்கு இன்னும் என்ன முடிவு காணப்பட்டது என்று தெரியவில்லை.

இந்த நிலையில் நேற்று இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இரண்டாவது சுற்றில் இரண்டாவது போட்டியில் இலங்கை பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது. பங்களாதேஷ் தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது.

இந்தப் போட்டியில் மழை குறுக்கீடு துளியும் இல்லை. இது இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால் இன்று எக்கச்சக்க எதிர்பார்ப்பில் காத்திருக்கும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி இதே மைதானத்தில் நடக்க இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த இரு அணிகளும் மோதிக்கொண்ட முதல் போட்டியில் இந்திய டாப் ஆர்டர் ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களிடம் விழுந்தது. இதனால் இந்திய டாப் ஆர்டர்கள் மேல் பெரிய விமர்சனம் இருக்கிறது. குறிப்பாக இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களிடம் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பிரச்சனை இருக்கிறது.

இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் இளம் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் “வலைப்பயிற்சியில் பந்தை இடது கையில் எறியும் நிபுணரை வைத்து பயிற்சி பெறுவது இதற்கு கொஞ்சம் வசதியாக இருக்கிறது. இது இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் வீசும் கோணத்தை சமாளித்து விளையாடுவதற்கு வசதியாக இருக்கிறது. இங்கு போட்டியில் அழுத்தம் இருக்கிறது, உலகக் கோப்பையை எடுத்துக் கொண்டால் எல்லா போட்டியும் அழுத்தம்தான். எனவே அங்கு விளையாட இது பயிற்சியாக அமையும்.

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது வித்தியாசமானது. முதல் முறை பாகிஸ்தான் சீனியர் அணிக்கு எதிராக விளையாடுவது அழுத்தத்தை சற்று வித்தியாசமாகக் காட்டி இருக்கிறது. ஆனால் நீங்கள் ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, பாகிஸ்தான் என்று யாருடன் விளையாடினாலும் இந்த அழுத்தம் இருக்கத்தான் செய்யும். இதைத் தாண்டி விளையாட வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!