“நான் அஷ்வினின் தூஸ்ராவை இப்படித்தான் கண்டுபிடித்தேன்.. இத ஃபாலோ பண்ணுங்க” – பீட்டர்சன் டிப்ஸ்

0
59
Ashwin

இந்தியா இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வருகின்ற 24-ஆம் தேதி மோதுகின்றனர். நாட்கள் நெருங்க நெருங்க இந்த தொடர் குறித்து இங்கிலாந்து தரப்பிலிருந்து நிறைய பேச்சுகள் வெளிவர ஆரம்பித்து இருக்கிறது.

இந்த வகையில் இந்தியாவில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 44 ஆவரேஜில் 73 ரன்கள் குவித்திருக்கும் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சனும் தன் பங்குக்கு சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

பீட்டர்சனின் பேச்சில் முக்கிய பேசுப்பொருளாக இருந்தது இந்திய சுழற் பந்துவீச்சு நட்சத்திரம் ரவிச்சந்திரன் அஸ்வின். 37 வயதான ரவிச்சந்திரன் அஸ்வின் உள்நாட்டில் மட்டும் 55 டெஸ்ட் போட்டிகளில் 337 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். மேலும் 26 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

பீட்டர்சன் தான் விளையாடிய காலத்தில் இந்தியாவில் ரவிச்சந்திரன் அஸ்வினின் பந்துவீச்சில் அவருடைய தூஸ்ராவை எப்படி கண்டுபிடித்தார் என்பதையும்? மேலும் செல்பி டபுள்யு மற்றும் போல்ட் ஆகாமல் இருப்பதை எப்படி உறுதி செய்து கொள்வது? என்பது பற்றியும், இங்கிலாந்து அணிக்கு சில டிப்ஸ்களை கொடுத்திருக்கிறார்.

இதுகுறித்து கெவின் பீட்டர்சன் கூறும் பொழுது ” நான் அஸ்வினின் தூஸ்ராவை முன்கூட்டியே கண்டுபிடித்தேன். அவர் பந்தை வீசுவதற்கு மிக முன்பாகவே லோட் செய்து விடுவார். ஏனென்றால் ஒரு ஆப் ஸ்பின்னர் இறுதி நேரத்தில் பந்தை கையில் மாற்றி தூஸ்ராவை வீச முடியாது. எனவே பந்தை அவர் முன்கூட்டியே கையில் லோட் செய்தால், தூஸ்ரா வரப்போகிறது என்று அர்த்தம்.

- Advertisement -

அவர் இப்படி பந்து வீசும் போது ஒவ்வொரு முறையும் நான் மிகவும் நம்பிக்கை உடன் இருந்தேன். அவரது தூஸ்ராவை நான் சீக்கிரத்தில் கண்டுபிடித்ததால், ஆப்சைடு அவர் வீசிய பந்துகளை எத்தனை முறை அடித்தேன் என்பதை நீங்கள் பார்த்தால் தெரியும்.

உங்கள் கால்கள் நன்றாக இருந்தால், மேலும் அதில் எந்தவிதமான தடுமாற்றமும் இல்லாமல் இருந்தால், நீங்கள் பந்துக்கு கீழே வந்து, பந்தின் லைனுக்கு விளையாட வேண்டும். இப்படி விளையாடும் பட்சத்தில், நீங்கள் பந்தை தவறவிட்டாலும் பிரச்சனை கிடையாது. ஏனென்றால் எல்பி டபிள்யு மற்றும் போல்ட் ஆவதில் இருந்து நீங்கள் உங்களை தற்காத்து விடுவீர்கள். எனவே இந்த முறையில் விளையாடுவது பாதுகாப்பானது” என்று கூறியிருக்கிறார்.