“ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் இப்படித்தான் சம்மதிக்க வைத்திருக்கும்..!” – ரவிச்சந்திரன் அஸ்வின் பரபரப்பு பேச்சு!

0
2623
Ashwin

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் முழுமையாக இருக்கின்ற நிலையில், தற்பொழுது ஐபிஎல் களம் இப்பொழுதே பரபரப்பாக காணப்படுகிறது.

அடுத்த வருடத்திற்கான ஐபிஎல் மினி ஏலம் இந்த ஆண்டு இறுதியில் வருகின்ற டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி நடக்க இருக்கின்ற காரணத்தினாலும், மேலும் ஹர்திக் பாண்டியா கேப்டன் பதவியை குஜராத் டைட்டன்ஸ் அணியில் உதறிவிட்டு, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்று இருப்பதாலும் இந்த பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இனி ஐபிஎல் வரலாற்றில் இப்படி ஒரு டிரேடிங் நடைபெறுமா என்பது சந்தேகம்தான். ஒரு அணியால் கழட்டி விடப்பட்டு, இன்னொரு புதிய அணிக்கு சென்று, அங்கு உடனே கேப்டன் ஆகி, முதல் தொடரிலேயே பட்டத்தையும் வென்று, அடுத்த தொடரில் இறுதிப் போட்டிக்கு சென்று, எதிர்பார்க்காதவைகளை செய்து, தனக்கான அடையாளத்தை உருவாக்கிய ஒருவர் திரும்பவும் கழட்டிவிட்ட அணிக்கு செல்வாரா என்பது சந்தேகம்தான்.

தற்பொழுது ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியில் இதையெல்லாம் விட்டு ஏன் சென்றால் என்பது பலருக்கும் மில்லியன் டாலர் கேள்வியாக இருந்து வருகிறது. கேப்டன் பதவிக்காக சென்றார் என்றால், அவர் தற்போதே குஜராத் அணிக்காக ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன்தான். இதுதான் எல்லோருக்கும்பல கேள்விகளை உருவாக்குகிறது.

மும்பை அணிக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் மேலும் நிறைய வர்த்தகம் இருக்கிறது என்று அவர் சென்று இருந்தாலும் கூட, குஜராத் மாதிரியான ஒரு அணிக்கு அவர் தனி ஒரு தலைவராக இருந்தார், எதிர்காலத்தில் அந்த அணியும் பெரிய அணியாக அவர் மூலமாகவே வளர்ந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் இதுகுறித்து பேசி உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது
“அவர் ஏன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்று இருப்பார் என்பது குறித்து அவரது பார்வையில் இருந்து ஒரு வீரராக எனக்கு கொஞ்சம் தெரிகிறது. ஆனால் முழுமையாக என்ன நடந்தது என்று தெரியாது. மும்பை இந்தியன்ஸ் அணி அவரை நம்பி அவரை அழைத்து இருந்தார் அவர் ஏற்றிருப்பார். ஏனென்றால் அது ஒரு வீரரை மதிப்பிடுவது பற்றியது.

ஒரு வீரரிடம் அந்த அன்பும் பாசமும் காட்டப்பட்டால் அது எப்போதும் இப்படித்தான் இருக்கும். ‘நீ கேப்டனாக சென்று உன்னால் முடிந்ததை காட்டு. பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்பது மாதிரியான உரையாடல்கள் நடந்திருக்கலாம். ஆனால் அப்படித்தானா என்று நமக்குத் தெரியாது. ஆனால் இது ஒரு மிகப்பெரிய டிரேடிங்!” என்று கூறி இருக்கிறார்!