“இந்தியாவுக்கு இது மட்டும் நடந்தா போதும்.. விராட் கோலி இதைத்தான் செய்வார்!” – சுரேஷ் ரெய்னா விளக்கமான பேச்சு!

0
456
Virat

இந்த முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இந்தியா ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை முழுமையாக இந்தியாவில் நடத்துகிறது.

இதன் காரணமாக இந்திய அணி கோப்பையை வெல்லும் என்கின்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் அதிகமாக இருக்கிறது. அதே சமயத்தில் இதுவே இந்திய அணிக்கு ஒரு அழுத்தமாகவும் மாறி இருக்கிறது.

- Advertisement -

இன்று இந்தியா அணி உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பலப்பரீட்சை நடத்த இருக்கிறது.

இந்தப் போட்டியை வெல்லும் பட்சத்தில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்வதற்கான பாதை எளிதாக அமையும். மேலும் உலக கோப்பையை வெல்வதற்கான நம்பிக்கையும் அதிகரிக்கும். எனவே இந்த போட்டி முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

இதற்கு முன்பாக இந்திய அணி குறித்து பேசி உள்ள சுரேஷ் ரெய்னா கூறும்பொழுது ” இந்தியா சொந்த மண்ணில் விளையாடும் பொழுது எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். கடந்த மூன்று உலகக் கோப்பைகளையும் நடத்திய நாடுகளே வென்று இருக்கின்றன. இந்தியா தனது சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னால் உலகக் கோப்பையை வெல்ல நல்ல ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்.

- Advertisement -

பல காரணங்களால் எனக்கு இந்த நம்பிக்கை இருக்கிறது. சூழ்நிலைக்கு தகுந்தவாறு எப்படி பந்து வீச வேண்டும் என்கின்ற அனுபவம் கொண்ட பந்து வீச்சு படை எங்களிடம் இருக்கிறது. 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்ற அஸ்வின் தற்போதும் பந்துவீச்சு துறையில் இடம் பெற்று இருக்கிறார்.

பேட் மூலம் விராட் கோலி இன்னிங்ஸ் முழுவதும் எல்லா ஓவர்களிலும் விளையாட முயற்சி செய்வார். எங்களிடம் உறுதியான தொடக்க ஜோடி இருக்கிறது. இருவருமே சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார்கள். எங்களுடைய முதல் மூன்று பேர் 25 ஓவர் முதல் 30 ஓவர்கள் வரை பேட்டிங் செய்தால், எங்களால் ஸ்கோர் போர்டில் நிறைய ரன்களை கொண்டுவர முடியும்!” என்று கூறியிருக்கிறார்!