நேற்று பாபர் ஆஸம் செய்த தவறு இதுதான் – வாசிம் அக்ரம் விமர்சனம்!

0
1411
Wasim akram

நேற்று ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் மோதிய டி20 போட்டி கிரிக்கெட் போட்டிகளில் மிகத் தரமான ஒரு போட்டியாக அமைந்திருந்தது. நாளான ஞாயிற்றுக்கிழமை ரசிகர்களுக்கு ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்காக அமைந்ததோடு, சிறந்த போட்டியை வெளிப்படுத்திய ஆட்டமாகவும் அமைந்தது!

பந்து வீசிய இந்திய அணி மிகச் சிறப்பாக பந்து வீசி பாகிஸ்தான் அணியின் 9 விக்கெட்டுகளை 120 ரன்கள் உள்ளாக கைப்பற்றி விட்டது. கடைசி நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக பாகிஸ்தான் அணியில் கடைசி ஜோடி அதிரடியாக ஆடி சில குறிப்பிட்ட ரன்களை எடுக்கவே பாகிஸ்தான் அணி 147 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.

- Advertisement -

அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தார். இதையடுத்து இணைந்த கேப்டன் ரோகித் சர்மா விராட் கோலி ஜோடி 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் தந்து நம்பிக்கை தந்தது. ஆனால் ரவீந்திர ஜடேஜா ஹர்திக் பாண்டியா ஜோடி தந்த 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் தான் இந்திய அணியை வெல்ல வைத்தது.

வெற்றியை நோக்கி இந்திய அணியை நகர்த்திக்கொண்டு இருந்த கேப்டன் ரோகித் சர்மா விராட் கோலி ஜோடி முக்கியமான கட்டத்தில் முகமது நவாஸ் சுழல் பந்தில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து இந்திய அணிக்கு பெரிய நெருக்கடியை உருவாக்கி விட்டது. இது குறித்து கௌதம் காம்பீர் சற்று கடுமையாகவே விமர்சித்து இருந்தார்.

இந்த ஆட்டத்தில் இரண்டாவது ஓவரை வீசிய முகமது நவாஸ் இறுதியாக 20-ஆவது ஓவரை வீச தான் கேப்டன் பாபரால் அழைக்கப்பட்டார். மிகச் சிறப்பாக பந்து வீசி ஆரம்பத்தில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்த அவருக்கு பாபர் அதற்கு மேல் ஓவர் தரவில்லை. தற்போது இது குறித்து பாகிஸ்தான் அணியின் லெஜெண்ட் முன்னாள் வீரரான வாசிம் அக்ரம் தனது பார்வையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

- Advertisement -

இதுபற்றி வாசிம் அக்ரம் கூறும்பொழுது ” எனக்கு இந்த டி20 ஆடுகளம் மிகவும் பிடிக்கும். பந்துவீச்சாளர்கள் பவுன்சர்கள் வீசுவதையும் இருபக்கமும் விக்கெட்டுகள் வீழ்த்துவதையும் பார்த்து ரசித்தேன். கடைசி ஓவர் வரை இந்தப் போட்டி ஒரு சிறந்த ஆட்டமாக இருந்தது. பாபர் ஒரு தவறு செய்தார். முகமது நவாஸ் 13 இல்லை 14வது ஓவர் வீசி இருக்க வேண்டும். ரவீந்திர ஜடேஜா ஆர்டிக் பாண்டியா போன்ற வீரர்கள் களத்தில் இருக்கும் பொழுது, டி20 போட்டியில் இறுதி ஓவரை ஒரு சுழற்பந்து வீச்சாளர் வீச முடியாது. இந்த இடத்தில் பாபர் தவறிவிட்டார் ” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய அனுபவம் அற்றவர்கள். அவர்கள் மிகவும் திறமையாக செயல்பட்டார்கள். பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருந்தது. பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு எதிர்காலம் மிகப் பிரகாசமாக இருக்கிறது” என்று தெரிவித்து இருக்கிறார்!