ஆஸ்திரேலியா செய்ததில் இதுதான் பெரிய தப்பு – கங்குலிக்கும் பதில் சொன்ன மைக்கேல் கிளார்க்!

0
794
Michael Clark

பார்டர் கவாஸ்கர் தொடரில் நாளை மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடக்க இருக்கின்றது.

முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது. நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணி வென்றால் தொடரை கைப்பற்றுவதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெறும். இறுதிப்போட்டி இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் ஐபிஎல் முடிந்து ஜூன் மாதம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுவதுமாக வென்று ஒயிட் வாஸ் செய்யும் என கூறியிருந்தார்.

இதற்கு காரணமாக கங்குலி கூறும் பொழுது, ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலியா அணிக்கும் தற்போதைய ஆஸ்திரேலியா அணிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றது. அந்த அணியில் இருந்த எல்லா வீரர்களையும் ஈடு செய்யும் வீரர்கள் இந்த அணியில் கிடையாது. மேலும் வித்தியாசமான சூழ்நிலைகளில் வித்தியாசமாக சோதிக்கப்பட்ட வீரர்கள் அவர்கள் என்று கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் “ஆஸ்திரேலியா அணி இந்தத் தொடரில் மீண்டு வருமென்று நான் நம்புகிறேன். அப்படி நடக்காவிட்டால் அது ஆஸ்திரேலியா ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை உண்டாக்கும். அதே சமயத்தில் கங்குலி இப்படியான கணிப்பை ஏன் கூறியிருக்கிறார் என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன்” என்று ஏற்று பேசி இருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய மைக்கேல் கிளார்க் ” ஆஸ்திரேலியா பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் இல்லை வேறு யாரும் என்ன பதில் சொல்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னை பொருத்தவரை ஆஸ்திரேலிய அணி முன்னதாகவே இந்தியாவுக்கு வந்திருக்க வேண்டும். உங்களுக்கு போதுமான நேரமும் முன் தயாரிப்பும் இல்லை என்றால் நீங்கள் இந்தியாவிற்கு வரவே கூடாது. மேலும் இது போன்ற சுற்றுப் பயணத்திற்கு வருவது என்றால் குறைந்தபட்சம் நீங்கள் ஐக்கிய அரபு எமிரேடிலாவது விளையாட வேண்டும்!” என்று கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து பேசி உள்ள அவர்
” மேலும் இந்தியா வந்து பயிற்சி போட்டியில் கட்டாயம் விளையாட வேண்டும். பயிற்சி போட்டி வேண்டாம் என்று மறுப்பது மிகவும் தவறான முடிவு. நிலைமையைப் பிரதிபலிப்பதன் மூலம் நீங்கள் இந்தியாவில் பயிற்சி செய்ய முடியாது. இது மிகவும் தவறு. இங்கிலாந்தில் பந்தின் தையல் மற்றும் அசைவு, ஆஸ்திரேலியாவின் பவுன்ஸ் மற்றும் வேகம், இந்தியாவின் பந்து சுழற்சி என எதிர்பார்க்கிறீர்கள். இப்படியான இடங்களில் உள்ள நிலைமைகளை நாங்கள் சொந்த ஊரிலேயே ஆடுகளங்கள் அமைத்து விளையாடி பயிற்சி பெற்று அதன் மூலம் வெற்றி பெற்று விடுவோம் என்பதை ஏற்க முடியாது. இப்படி வெற்றி பெறுவது சாத்தியமே இல்லாதது!” என்று ஆஸ்திரேலியா அணியை விமர்சித்துக் கூறியிருக்கிறார்!