“நான் பெரிய பிளேயர்கள்கிட்ட இருந்து இத மட்டும்தான் எடுத்துக்கிறேன்.. அதுவே எனக்கு போதும்!” – சுப்மன் கில் அதிரடி பேட்டி!

0
318
Gill

இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலி, ரோஹித் சர்மா காலத்திற்குப் பிறகு, அவர்களது இடத்தை நிரப்பக் கூடிய வீரர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் 23 வயதான இளம் வீரர் சுப்மன் கில்!

இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலிக்கு ஒருநாள் கிரிக்கெட் வடிவம் எப்படி மிகவும் சரியானதாக இருக்கிறதோ, அதேபோல் இந்த இளம் வீரருக்கும் ஒருநாள் கிரிக்கெட் வடிவம் மிகவும் சரியான ஒன்றாக இருக்கிறது.

- Advertisement -

இந்த ஆண்டில் மட்டும் ஒரு நாள் கிரிக்கெட்டில் 1300 ரன்கள் குவித்திருக்கிறார். மேற்கொண்டு இன்னும் அவர் உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றில் 5 போட்டிகள் விளையாட இருக்கிறார். மேற்கொண்டு இந்த ரன் குவிப்பு தொடரும் என்று நம்பலாம்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக சுப்மன் கில்லே இருப்பார் என்று பல முன்னணி முன்னாள் வீரர்கள் கணித்திருந்தார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட, முதல் இரண்டு போட்டிகளை தவறவிட்டார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்குத் திரும்பிய அவர் 16 ரன்கள் எடுத்தார். நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிராக உலக கோப்பையில் தன்னுடைய முதல் அரை சதத்தை பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

தான் தயாராவது குறித்து பேசி உள்ள சுப்மன் கில் “தற்பொழுது நான் நன்றாக உணர்கிறேன். உடல்நிலை சரியில்லாத பொழுது ஆட்டத்தை இழந்ததில் ஏமாற்றம் அடைந்தேன். ஆனால் சில விளையாட்டு நேரங்களை பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

நீங்கள் மனதளவில் வெளியேறி சென்று விளையாடுவதற்கு எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். அதைத்தான் நான் எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருந்தேன். உடல் நலக்குறைவால் உடல் எடையை இழந்திருக்கிறேன். அதைத் திரும்ப எடுத்துக் கொள்ள முடியும்.

எங்கள் கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக பேட்டிங் செய்கிறார். குறிப்பாக இலக்கை துரத்தும் பொழுது அவர் அதிரடியாக விளையாடுகிறார். அது எங்களுக்கு சரியான வேகத்தை அளிக்கிறது என்று நான் நினைக்கிறேன். அடுத்து வரும் பேட்ஸ்மேன்கள் ஓவருக்கு நான்கு முதல் ஐந்து ரன்கள் அடித்தால் போதும் என்பது மிகவும் வசதியாக இருக்கிறது.

மூத்த வீரர்களிடமிருந்து நான் கற்றுக் கொள்வது என்னவென்றால், அவர்கள் உலகக் கோப்பை மாதிரியான பெரிய போட்டிகளில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை பார்ப்பதுதான். சில சமயம் ஆக்ரோஷமாக விளையாடுவது, சில சமயம் செல்லில் பதுங்குவது என்று நான் கற்றுக் கொள்கிறேன். பெரிய போட்டிகளில் அவர்களுடைய மனநிலை எவ்வாறு இருக்கிறது என்பதுதான் நான் கற்றுக்கொள்ள இருக்கும் விஷயம்!” என்று கூறி இருக்கிறார்!