“இது நாங்க ஜெயிக்க வேண்டிய மேட்ச்.. ஒரு ஆள் நிக்காம கோட்டை விட்டுட்டோம்!” – நெதர்லாந்து கேப்டன் வருத்தமான பேச்சு!

0
3410
Netherlands

நடப்பு உலகக்கோப்பை தொடரில் பத்தாவது அணியாக இணைந்தது நெதர்லாந்து அணி. ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்ற உலகக்கோப்பை தகுதி சுற்றில், இலங்கை ஒன்பதாவது அணியாக தகுதி பெற, நெதர்லாந்து பத்தாவது அணியாக தகுதி பெற்றது.

தகுதி சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நெதர்லாந்து பெற்ற வெற்றி மிகவும் பரபரப்பான அதே சமயத்தில் நம்ப முடியாத வெற்றியாக அமைந்தது. அந்த தோல்வி வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக வெளியே அனுப்பிவிட்டது.

- Advertisement -

நடப்பு உலகக் கோப்பைக்கு முன்பாக உலகக் கோப்பையில் பங்கேற்கும் பத்து அணிகளில் 9 அணிகள் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் சர்வதேச போட்டிகளில் விளையாடி வந்தன. நெதர்லாந்து அணிக்கு மட்டுமே சர்வதேச ஒருநாள் போட்டிகள் ஏதும் கிடையாது.

இந்த நிலையில் நெதர்லாந்த அணி இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஹைதராபாத் ஆடுகளத்தில் அவர்களை 286 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து அசத்தியது. அந்த அணியின் பாஸ் டி லீட் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

மேலும் பேட்டிங் செய்யும்பொழுது 120 ரண்களுக்கு இரண்டு விக்கெட் மட்டும்தான் நல்ல ரன் ரேட்டில் நெதர்லாந்து அணி இழந்திருந்தது. இந்த இடத்தில் இருந்து போட்டியை சுலபமாகவே நெதர்லாந்து அணியால் வெல்ல முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹாரிஸ் ரவுப் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி முட்டுக்கட்டை போட்டு விட்டார்.

- Advertisement -

தோல்விக்கு பின் பேசிய நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் ” இது கொஞ்சம் ஏமாற்றம் தருகிறது. நாங்கள் நன்றாக பந்துவீசி நன்றாக ஃபீல்டிங் செய்தோம். 120 ரன்களுக்கு இரண்டு விக்கெட் என்ற நிலையில் எங்களால் வெற்றி பெற முடியும் என்று நாங்கள் நம்பினோம். எங்கள் பேட்ஸ்மேன்கள் சுழற்சிந்து வீச்சை நன்றாக விளையாடுவார்கள் என்பதால், வெற்றி பெற முடியும் என்று உள்ளுணர்வு கூறியது.

பாஸ் டி லீட் மூன்று துறைகளிலும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். அவருடன் யாராவது சேர்ந்து விளையாட வேண்டியது இருந்தது. அப்படி நாங்கள் யாரும் விளையாடாமல் விட்டு விட்டோம். பாகிஸ்தான் அணியிடம் தரமான பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியும். அவர்கள் சரியான நேரத்தில் விக்கெட் எடுத்து எங்களை பின்தள்ளி விட்டார்கள்!” என்று கூறியிருக்கிறார்!