“இது டூப்ளிகேட் ஆஸ்திரேலியா!” – தாறுமாறாக வறுத்தெடுத்த ஹர்பஜன்சிங்!

0
1477
Harbhajan

உலகக் கிரிக்கெட் டெஸ்ட் தொடர்களில் மிக மிக சிறப்பு வாய்ந்தது, ரசிகர்களை மைதானங்களுக்கு இழுத்து வரக்கூடியது இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பலகாலமாக நடந்து வரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆசஷ் தொடர்!

தற்பொழுது இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடந்து வரும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இதை முறியடித்திருக்கிறது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவிற்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விமானம் ஏறுவதற்கு முன்பே இது ஆசஷ் தொடரை விட எங்களுக்கு முக்கியம் என்று பேசியதே உதாரணம்!

- Advertisement -

இதற்கு அடுத்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்கள் ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் என எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்தியாவின் டெஸ்ட் ஆடுகளங்கள் குறித்து குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் அள்ளித் தூவினார்கள். ஒரு கட்டத்தில் நாக்பூர் ஆடுகளம் புகைப்படம் வெளியானதும் ஐசிசி தலையிட வேண்டும் என்கின்ற அளவுக்கு போனார்கள்!

இப்படியான நிலையில் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு சுருண்டது. ஆனால் அதே ஆடுகளத்தில் இந்திய அணி நானூறு ரன்கள் குவித்தது. இறுதியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்றது. இதையடுத்து டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 48 ரண்களுக்கு 9 விக்கட்டுகளை பறிகொடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் மீண்டும் தோற்றது. இந்த ஆஸ்திரேலியா அணி மீதான விமர்சனங்கள் தற்பொழுது ஆஸ்திரேலியா நாட்டிலிருந்தே கடுமையாக கிளம்பி இருக்கிறது!

இந்த நிலையில் இந்த ஆஸ்திரேலியா அணி பற்றி பேசிய ஹர்பஜன் சிங்
” இவர்கள் ரவிச்சந்திரன் அஸ்வினின் டூப்ளிகேட்டை வைத்து பயிற்சி செய்தார்கள். ஆனால் இந்த ஆஸ்திரேலியா அணியே டூப்ளிகேட் என்று நான் உணர்கிறேன். எதிர்மறையான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தும் இவர்களின் மனநிலை, முதல் பந்து வீசப்படும் முன்பே ஆட்டம் இழக்கும் அளவுக்கு மனக்குழப்பத்தை உண்டாக்கி கொண்டது. இந்த சுற்றுப்பயணத்திற்கு அவர்கள் எந்த ஆயத்தமும் செய்யவில்லை என்றே தெரிகிறது. அவர்கள் செய்வதை எல்லாம் பார்க்கும் பொழுது ஆட்டம் இழப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்றுதான் பயிற்சி செய்தார்கள் என்பது போல்தான் இருக்கிறது ” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய ஹர்பஜன் சிங்
” இந்தியா நான்கு போட்டிகளையும் வெல்லும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்தத் தொடர் 10 போட்டிகளைக் கொண்டிருந்தாலும் இந்தியா பத்து போட்டிகளையும் வெல்லும். ஏனெனில் இந்த ஆஸ்திரேலியா அணிக்கு பயர்பவர் இல்லை. ஆடுகளத்தில் கொஞ்சம் பந்து திரும்பி நாளே அவர்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்தே விக்கெட்டுகளை வீசுகிறார்கள்!” என்று தாறுமாறாகக் கலாய்த்திருக்கிறார்!