“இதெல்லாம் கேவலமான விஷயம்!” – தேர்வுக்குழுவினரை விளாசிய வெங்கடேஷ் பிரசாத்!

0
478
Prashad

இந்திய உள்நாட்டு வீரர்களை வைத்து ஆறு மண்டலங்களாகப் பிரித்து நடத்தப்படும் டெஸ்ட் போட்டி தொடர்தான் துலீப் டிராபி.

இந்த உள்நாட்டு டெஸ்ட் தொடர் முதன்முதலாக 1961 – 62ல் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 19 முறை பட்டத்தை வென்று வெஸ்ட் ஜோன் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. கடந்த முறையும் இவர்களே பட்டம் வென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

துலீப் டிராபியில் வெஸ்ட் ஜோனின் ஆதிக்கத்திற்கு காரணம் அந்த மண்டலத்தில் பரோடா, சௌராஷ்ட்ரா, குஜராத், மும்பை மகாராஷ்டிரா ஆகிய மாநில சேர்ந்த வீரர்கள் வருவதுதான்.

இதேபோல சவுத் ஜோனில் தமிழகம் இடம்பெறுகிறது. இந்த மண்டல பிரிவில் ஆந்திர பிரதேஷ், கோவா, ஹைதராபாத் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வருகின்றன.

தற்பொழுது இந்த வருடம் நடக்க இருக்கின்ற துலீப் டிராபி தொடருக்கு கேரளா அணிக்காக ரஞ்சித் தொடரில் ஏழு போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 36 வயதான ஆல் ரவுண்டர் ஜலக் சக்சேனா சவுத் ஜோனுக்கு தேர்வு செய்யப்படவில்லை.

- Advertisement -

இது தற்பொழுது உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகவும் சர்ச்சையான விஷயமாக மாறி பெரிய விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது. இதுகுறித்து பலர் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

தற்பொழுது இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் கூறும்பொழுது “இந்திய கிரிக்கெட்டில் பல நகைப்புக்குரிய விஷயங்கள் நடைபெற்று வருகின்றன. ரஞ்சி டிராபியில் அதிக விக்கெட் எடுத்தவர் தென்மண்டல அணிக்காகத் தேர்வு செய்யப்படாதது திகைப்பூட்டும் வகையில் இருக்கிறது. இந்த மாதிரியான செயல்கள் ரஞ்சி தொடரை பயனற்றதாக மாற்றுகின்றன. இது ஒரு அவமானகரமானது!” என்று காட்டமாகத் தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்!

நன்றாகச் சென்று கொண்டிருந்த இந்திய கிரிக்கெட்டில் சில பல வருடங்களாகத் அணி தேர்வு விசயத்தில் வீரர்களுக்கான வாய்ப்பில் பல குளறுபடிகள் நடந்து வருவது, இந்திய அணியை வெளியிலிருந்து பயங்கரமாக பாதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது!