இந்த இந்திய இளம் வீரர் பேட் பண்றது ஆண்ட்ரூ சைமன்சை ஞாபகப்படுத்துகிறது- பிரட் லீ புகழ்ச்சி!|

0
21014
Brett Lee

நடப்பு ஐபிஎல் 16 வது சீசன் மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. மேலும் ப்ளேயர் சுற்றுக்கான போட்டி மிகவும் இறுக்கமடைந்து இருக்கிறது!

இந்த ஐபிஎல் தொடரில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் விதமாக சில வீரர்கள் தங்களது திறமைகளால் வெளிப்பட்டு வருகிறார்கள்.

- Advertisement -

இதில் முக்கியமான வீரராக பஞ்சாப் அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் இது சர்மா தனது பேட்டிங் திறமையால் வெளிப்பட்டு வருகிறார்.

அணி எப்பொழுது எல்லாம் சிக்கலான நிலைமையில் இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் எந்த இடத்தில் பேட்டிங்கில் வந்தாலும் தாக்கத்தை தரக்கூடிய அளவில் செயல்படுகிறார்.

இந்த ஐபிஎல் தொடரில் அவர் முதலில் சந்திக்கும் 10 பந்துகளில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 183. மொத்த ஸ்ட்ரைக்ரேட் 164 என்பதில் இருந்தே அவர் எவ்வளவு தாக்கம் தரக்கூடிய வீரர் என்று புரியும்.

- Advertisement -

தற்பொழுது இவரை பிரெட்லீ ஆண்ட்ரூ சைமன்ஸ் உடன் இணைத்து புகழ்ந்து பேசி உள்ளார். அவர் கூறும் பொழுது
” ஜிதேஷ் சர்மா பந்தை அதிகம் அடிக்க முயற்சிக்காமல் மிகச்சிறந்த பவர் கேமை பெற்றுள்ளார். அடிப்பதற்காக வெளியே வந்து ஷேப்பை இழக்கும் வீரர்கள்தான் இருக்கிறார்கள். ஜிதேஷ் சர்மா அதைச் செய்வதில்லை. அவர் மிகச் சரியாக விளையாடுகிறார்.

அவர் பேட்டிங் செய்யும் விதம் எனக்கு ஆண்ட்ரூ சைமன்ஸ் பேட்டிங் செய்யும் விதத்தை ஞாபகப்படுத்துகிறது. அவர் வெளியே வந்து பந்தை மிகக் கடுமையாக அடிக்க முயற்சி செய்யாமல், முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்து அடிப்பார். இப்படியான திறமை ஒரு மிகப்பெரிய சொத்து என்று கூறியிருக்கிறார்!

பஞ்சாப் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் வாசிம் ஜாஃபர் ஜிதேஷ் ஷர்மா பற்றி கூறும்பொழுது ” அவர் ஒரு பேட்டராகவும் பினிஷர் ஆகவும் வளர்வதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரை எந்த இடத்தில் இறங்க வைத்தாலும் எந்த சிறந்த அணிக்கும் சிறந்த வீரருக்கு எதிராகவும் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் இந்திய அணிக்காக விளையாட தயாராக இருக்கிறார்!” என்று கூறியுள்ளார்!