“தென்னாப்பிரிக்காவ இந்த இந்திய அணி ஒன்னும் செய்ய முடியாது!” – ஜாக் காலிஸ் வெளிப்படையான சவால்!

0
929
Kallis

தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு இந்திய அணி சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவங்குகிறது. இந்த டி20 இந்திய அணிக்கு சூரியகுமார் யாதவ் தலைமை தாங்குகிறார்.

- Advertisement -

இதற்கு அடுத்து டிசம்பர் 17ஆம் தேதி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் துவங்குகிறது. இந்த ஒருநாள் கிரிக்கெட் இந்திய அணிக்கு கேஎல்.ராகுல் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

நடப்பு டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு மிகவும் முக்கியமான டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 ஆம் தேதி துவங்குகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இது அமைகிறது. இந்த இந்திய டெஸ்ட் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருக்கிறார்.

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்ததில், இதுவரையில் வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடர்களை மட்டுமே வென்றிருக்கிறது. ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது. இந்த வகையில் ஆசியாவில் இருந்து இலங்கை மட்டுமே தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்ற ஒரே அணியாக இருக்கிறது.

- Advertisement -

கடந்த முறை விராட் கோலி தலைமையில் 2021 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்த பொழுது முதல் டெஸ்ட் போட்டியை வென்று தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் தோற்று, அரிய வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டது. இந்த முறை ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி சாதிக்குமா? என்கின்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

இதுகுறித்து தென் ஆப்பிரிக்க லெஜெண்ட் ஜாக் காலிஸ் கூறும்பொழுது “இந்த இந்திய அணி சிறப்பானதுதான். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் வைத்து தென் ஆப்பிரிக்காவை வீழ்த்துவது என்பது மிகவும் கடினமானது. உள்நாட்டில் தென் ஆப்பிரிக்க அணி வலிமையான அணி.

இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடக்கும் செஞ்சூரியன் மைதானம் தென் ஆப்பிரிக்காவுக்கு சாதகமாகவும், நியூலேண்ட்ஸ் மைதானம் இந்தியாவுக்கு சாதகமாகவும் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

இந்த டெஸ்ட் போட்டியில் ஒரு அணி மற்ற அணியை விட ஏதாவது ஒன்று இரண்டு செசன்களில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறும். அந்த அளவிற்கு இரு அணிகளுக்கும் இடையே போட்டி மிக நெருக்கமாக கடினமாக இருக்கும் என்று நினைக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!