டி20 உலகக்கோப்பையில் இந்த இந்திய வீரர் இருக்க மாட்டார் – பாகிஸ்தான் வீரர் தகவல்!

0
48
Asiacup

இந்த மாதம் இருபத்தி ஏழாம் தேதி யுனைடெட் அரபு எமிரேட்டில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் டி20 வடிவத்தில் தொடங்க இருக்கிறது. இருபத்தி எட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றன!

இந்த ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட அணி குறித்து பெரிதும் விமர்சிக்கப்பட்டது வேகப்பந்து வீச்சாளர்களின் பற்றாக்குறை பற்றிதான். அறிவிக்கப்பட்டுள்ள அணியில் புவனேஸ்வர் குமார், ஆவேஸ் கான் அர்ஸ்தீப் சிங் என மூன்று பிரதான வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த அணியில் தற்போது நல்ல பவுலின் பார்மில் இருக்கும் முகமது ஷமியை தேர்வு செய்திருக்க வேண்டுமென பல முன்னாள் வீரர்கள் கருத்து கூறியிருந்தனர். அதே சமயத்தில் இந்திய அணியின் மிகமுக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரை அணியில் தேர்வு செய்யவில்லை என்று தேர்வாளர்கள் கூறியிருந்தனர்.

ஜஸ்பிரித் பும்ரா காயம் எப்படிப்பட்டது? எத்தனை நாளுக்குள் சரியாகும்? என்று எந்த விவரங்களும் வெளியில் கூறப்படவில்லை. தற்போது அவர் ஆசிய கோப்பையில் இல்லாத சூழலில், மேற்கொண்டு அவர் செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பையிலும் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தற்போது இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதே சமயத்தில் அதற்கு மாற்றாக நம்பிக்கையையும் தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது ” பயங்கரமான யார்க்கர்களை வீசக்கூடிய பும்ரா உலகின் மிகச்சிறந்த பவுலர் தான். ஆனால் முதுகில் ஏற்பட்டுள்ள காயத்தால் ஆசிய கோப்பையில் இருந்து அவர் விலகி உள்ளதால், அவர் ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பை போட்டியில் இருந்தும் விலகுவார் என்று அஞ்சுகிறேன். அவர் மேற்கொண்டு விளையாடினால் அவரது காயம் இன்னும் அதிகமாகலாம். அவர் டி20 உலக கோப்பையில் கலந்து கொள்ள முடியாமல் போகலாம். இந்தியாவுக்கு மிக மோசமான செய்தியாக அமையும்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” தற்போது பும்ரா இல்லையென்றாலும் இந்திய அணி நிர்வாகம் அவருக்கு மாற்றாக சில வேகப்பந்து வீச்சாளர்களை பரிசோதித்து வாய்ப்பு கொடுத்து அணியில் வைத்திருக்கிறது. இது நல்ல விஷயமாகும். அர்ஸ்தீப் சிங் இறுதி கட்ட ஓவர்களில் மிகச் சிறப்பாக பந்து வீசுகிறார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரில் தொடர்நாயகன் விருதையும் பெற்றிருந்தார். அவர் இந்திய அணிக்கு தேவைப்படும் பொழுதெல்லாம் மிகச் சிறப்பாக செயல்படுவார். ஒருவேளை பும்ரா விளையாட முடியாமல் போனால் அந்த இடத்திற்கு அர்ஸ்தீப் சிங் சரியானவராக இருப்பார்” என்றும் கூறியிருக்கிறார்!