“இந்த இந்திய வீரர் துறவி மாதிரி வாழ்ந்துட்டு இருக்காரு!” – இந்திய முன்னாள் வீரர்களிடம் குவியும் பாராட்டு!

0
455
Ict

இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 141 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதற்கு அடுத்து இன்று டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி ட்ரினிடாட் பார்க் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு துவங்க இருக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் ஏதாவது ஒரு மாற்றம் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு

- Advertisement -

இன்று நடைபெறும் போட்டியில் விராட் கோலி களம் இறங்குகிறார் என்றால், அவர் சச்சின், ராகுல் டிராவிட், தோனி இவர்களுக்கு அடுத்து இந்திய அணிக்காக 500 ஆவது சர்வதேச போட்டியில் விளையாடும் நான்காவது வீரராக இருப்பார்.

ஒரு தேசிய அணிக்காக ஒரு வீரர் 500 சர்வதேச போட்டிகளில் விளையாடுவது என்பது அசாதாரணமான விஷயம். கிரிக்கெட்டுக்குள் வரும் எல்லா வீரர்களாலும் இத்தகைய சாதனையை எட்ட முடியாது. குறிப்பாக ஏதாவது சில வீரர்கள் மட்டுமே இந்த சாதனை தூரத்தை எட்டும் கால அளவிற்கு மிகச் சிறப்பாக விளையாடி அணியில் நிலைத்திருப்பார்கள். இதற்கு உடல் தகுதி வரை மிகப் பெரிய உழைப்பை கொடுத்தால் மட்டுமே முடியும்.

தற்பொழுது விராட் கோலியின் இந்தச் சாதனை குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஆகாஷ் சோப்ரா, பிரக்யான் ஓஜா மற்றும் வாசிம் ஜாஃபர் ஆகியோர் தங்களது கருத்துக்கள் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

ஆகாஷ் சோப்ரா “விராட் கோலியின் விளையாட்டு மீதான அர்ப்பணிப்பு மிகவும் வெளிப்படையானது. அவர் கிரிக்கெட்டுக்காக ஒரு துறவி போல் வாழ்ந்த விதம் தான் அவரை இவ்வளவு பெரிய உயரத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. இதனால்தான் அவர் இந்த விளையாட்டின் தூதுவராக இருக்கிறார். பொதுவான கிரிக்கெட்டுக்காகவும் இந்திய கிரிக்கெட் காகவும் அவர் செய்திருக்கும் விஷயங்களுக்கு நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருப்போம்!” என்று கூறியிருக்கிறார்!

பிரக்யான் ஓஜா ” இந்த நேரத்தில் இது மேலும் ஒரு இறகு ஆகும். இது மிகச் சிறப்பான சாதனை. மிகச்சிலரே இப்படியான சாதனையை எட்டுகிறார்கள். இது அவருக்கு உந்துதலாக இருக்கும் என்று நம்புகிறேன். மேலும் அவர் நாட்டுக்காக விளையாடி நல்ல பேட்டிங் ஃபார்முவுடன் தொடர்வார்!” என்று கூறியிருக்கிறார்!

வாசிம் ஜாபர் “எல்லோரும் 500 போட்டிகளில் விளையாட முடியாது. எல்லோருக்கும் அவ்வளவு காலம் இருக்காது. அவர் நீண்ட காலம் விளையாடுவது பாராட்டுக்கு உரியது. அவர் தன்னை பொருத்தமாகவும் சீராகவும் வைத்து சர்வதேச கிரிக்கெட்டில் 75 சதங்கள் அடித்து இருக்கிறார். இது அவரது ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் உறுதியை குறிக்கிறது. மேலும் அவரிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் உள்ளது. உலகம் முழுவதும் உள்ள அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் அவர் ஒரு முன்மாதிரியாக இருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!