இந்த இந்திய வீரர் எங்களை போன்றவர்; இந்திய அணி நிர்வாகம் சிந்தனை வேறு ; வாசிம் அக்ரம் பரபரப்புப் பேச்சு!

0
9304
Wasim Akram

தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்துகொண்டிருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கு சென்றிருக்கும் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சு துறைதான் கொஞ்சம் பின்தங்கி இருக்கிறது.

ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்து வேகமாகவும் எகிறியும் வரும். இதற்கு அணியில் மணிக்கு 140 முதல் 150 கிலோ மீட்டர் வரை வேகத்தில் வீசக்கூடிய வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பது முக்கியம்.

- Advertisement -

தற்போதைய இந்திய அணியில் புவனேஸ்வர் குமார், ஹர்சல் படேல், அர்ஸ்தீப் மூவரும் வேகமாக வீசக் கூடியவர்கள் கிடையாது. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தொடர்ந்து நல்ல வேகத்தில் வீசுவார் என்று கூறமுடியாது. அதேபோல் ஆடும் அணியில் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் முகமது சமி இருப்பாரா என்று தெரியாது. இப்படிப்பட்ட நிலைமையில்தான் இந்திய வேகப்பந்து வீச்சு துறை தற்போதைய டி20 உலக கோப்பையில் இருக்கிறது.

ஜஸ்பிரித் பும்ரா காயம் அடைவதற்கு முன்பே ஆஸ்திரேலிய சூழல்களை கருத்தில் கொண்டு முகமது சமி மற்றும் உம்ரான் மாலிக் இருவரும் இந்திய அணிக்குள் இருக்க வேண்டும் என்ற கருத்துக்கள் நிலவி வந்தது. சில வெளிநாட்டு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்களும் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் உம்ரான் மாலிக் இடம் பெற வேண்டும் என்று கூறி வந்தனர். குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ கூறும்பொழுது ” உம்ரன் மாலிக் ஒரு விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார். அவரை இந்திய அணி நிர்வாகம் கேரேஜில் நிறுத்தி வைத்து வீணடிக்கிறது ” என்று கூறியிருந்தார்.

தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம், பிராட் லீயின் கருத்தோடு ஒத்துப் போய் உம்ரன் மாலிக் பற்றிய தனது கருத்தை முன்வைத்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறும்பொழுது ” பிரட் லீ சொன்னதைதான் நானும் சொன்னேன். ஆசியக் கோப்பையின் போது நான் அங்கு சென்றிருந்தேன். அப்பொழுது இதை நான் கூறினேன். எங்களிடம் நதீம், ஷாகின், ஹாரிஸ் வேகத்தில் இருப்பதுபோல, உம்ரன் மாலிக்கிடம் வேகம் இருக்கிறது. கோடைக்காலத்தில் அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் அவர் சில ரன்களை விட்டுக் கொடுத்து இருந்தார். ஆனால் அவரது வேகம் நன்றாக இருந்தது. டி20 கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்கள் நிறைய ரன்களுக்கு போவது நடக்கக்கூடிய ஒன்றுதான். அதற்குப்பிறகு இங்கிலாந்து தொடரில் ஒரு ஆட்டத்தில் வாய்ப்பு கிடைத்தது. தற்போது அவர் இந்திய உள்நாட்டு தொடரில் விளையாடி வருகிறார். இதுவே அவரை இந்திய அணியில் தொடர்ந்து வைத்து விளையாட விட்டிருந்தால், அவர் அணியுடன் சேர்ந்து விளையாடி இன்னும் கற்றுக்கொண்டு சீக்கிரத்தில் தயாராக இருப்பார். ஆனால் இந்திய அணி நிர்வாகத்தில் திட்டம் சிந்தனை வேறாக இருக்கிறது ” என்று கூறியிருக்கிறார்!