இந்த இந்திய வீரர் அணியில் இருக்க தகுதி இல்லாதவர் – பரபரப்பு கிளப்பும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

0
439
Kaneria

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி கடைசியாக உலகக் கோப்பையை வென்று 12 வருடங்கள் ஆகிறது. ஆனாலும் கூட கிரிக்கெட் உலகில் இந்திய அணிதான் மிக முக்கியமான உயரமான இடத்தில் இருக்கிறது!

இந்திய அணி தொடர்பாக நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுக்கும், கிரிக்கெட் உலகத்தில் நிறைய நாடுகளின் முன்னாள் வீரர்களிடம் இருந்து அதற்கான கருத்துக்கள் வெளிவரும்.

- Advertisement -

இந்த அளவில் இந்திய கிரிக்கெட் உலக கிரிக்கெட்டில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது. இந்திய கிரிக்கெட்டில் நடைபெறும் ஒவ்வொரு சம்பவங்களும் உலக கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமான இடத்தை பிடிக்கின்றன.

தற்பொழுது உலகக்கோப்பைக்கு முன்பாக மிக முக்கியமான ஒருநாள் கிரிக்கெட் தொடராக பார்க்கப்பட்ட ஆசியக் கோப்பை தொடருக்கு, இந்திய அணி அறிவிப்பு எப்பொழுது வரும் என்று இந்தியா தாண்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியத் தேர்வுக்குழு 17 பேர் கொண்ட அணியை ஆசியக் கோப்பை தொடருக்காக அறிவித்தது. இந்த அணியில் இருந்து அணியுடன் நீண்ட நாட்களாக பயணித்து வந்த லெக் ஸ்பின்னர் சாகல் அதிரடியாக நீக்கப்பட்டார். இதுகுறித்து பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வந்தார்கள்.

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங் இது குறித்து கூறும் பொழுது ” உண்மையில் இந்தியாவில் தரமான சுழற் பந்துவீச்சாளர் என்றால் அது சாகல்தான். அவரை தேர்வு செய்யாதது எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவரது செயல்பாடு சிறப்பாக இல்லைதான். ஆனால் அதனால் மோசமான பந்துவீச்சாளராக மாறிவிடவில்லை. இந்தியாவில் உலகக்கோப்பை நடப்பதால் அவர் நிச்சயம் அணியில் இருக்க வேண்டும்!” என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் இதே விஷயம் குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா “சாகல் தற்பொழுது இந்திய அணியில் இடம்பெறுவதற்கு தகுதியற்றவர். அவர் மிகவும் சீரற்றவராக இருக்கிறார். அதே மறுபுறம் குல்தீப் யாதவ் வழக்கமாக விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரால் மிடில் ஓவர்களில் திறமையாக செயல்பட முடியும். தேர்வாளர்கள் சரியான முடிவை எடுத்திருக்கிறார்கள். நான் சாகலை விட்டு குல்தீப் உடன்தான் செல்வேன்!” என்று கூறியிருக்கிறார்!