“இந்த இந்திய பிளேயருக்கு பாகிஸ்தானை பார்த்து பயம்.. அதான் ஜகா வாங்கறார்” – ஸ்ரீகாந்த் கடுமையான விமர்சனம்!

0
634
ICT

நேற்று இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆசிய கோப்பையின் இரண்டாவது சுற்று போட்டியில் மோதியது. இந்தியா பாகிஸ்தான் ரசிகர்கள் பயந்திருந்தது போலவே மழை வந்து போட்டியை நிறுத்தியது. இந்த நிலையில் போட்டி இன்று நடைபெற இருக்கிறது.

இந்தப் போட்டிக்கு காயத்தில் இருந்து திரும்ப வந்த கே எல் ராகுல் அணியில் இடம் பெற்றார். மேலும் இசான் கிஷானுக்கும் வாய்ப்பு தொடரப்பட்டது. அதே சமயத்தில் சில காலமாக தொடர்ந்து ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம்பெறவில்லை.

- Advertisement -

இது குறித்தான காரணம் பற்றி கூறும் பொழுது, போட்டி துவங்குவதற்கு கொஞ்சம் நேரம் இருக்கும் முன்பு, ஸ்ரேயாஸ் தமக்கு முதுகுப் பகுதியில் பிரச்சனை இருப்பதாக அணி நிர்வாகத்திடம் கூற, கடைசி நேரத்தில் அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் அணியில் இடம் பெற்றதாக கூறப்பட்டது.

ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடருக்கு முன்பு இருந்தே முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக கிரிக்கெட்டை விட்டு விலகி இருந்தார். மேலும் அவர் இதற்காக அறுவை சிகிச்சை செய்து தேசிய கிரிக்கெட் அகாடமி கண்காணிப்பில் இருந்து உடல் தகுதி சான்றிதழ் பெற்று அணிக்கு திரும்ப வந்தார். மேலும் அவர் உலகக் கோப்பை இந்திய அணியிலும் இடம் பெற்றார்.

இந்த நிலையில் தாம் எந்த காயத்திற்காக கிரிக்கெட் விளையாடாமல் இருந்து அறுவை சிகிச்சை செய்து திரும்ப வந்தாரோ, அதே காயம் போட்டிக்கு சிறிது நேரம் இருக்கும் பொழுது திரும்ப ஏற்பட்டிருப்பது, இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்திற்கு நல்ல செய்தியாக இல்லை. எனவே இவருக்கு மாற்று வீரர் உலகக் கோப்பை இந்திய அணிக்கு கொண்டு வர வேண்டுமா? என்கின்ற பேச்சு போய்க் கொண்டிருக்கிறது.

- Advertisement -

இது சம்பந்தமாக பேசிய இந்திய முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ” என்னைப் பொறுத்தவரை பாகிஸ்தான் மேட்ச் குறித்து அவருக்கு பயம், அதனால்தான் கடைசி நேரத்தில் முதுகுப்பகுதியில் மீண்டும் வலி என்பதாக கூறி விலகி இருக்கிறார் என்பதாகத்தான் சொல்லுவேன்.

இப்படியான காரணத்திற்காகத்தான் அணியில் இருந்து வெளியில் இருந்தார். பிறகு காயம் சரியாகியது என்று அணிக்குள் வந்தார். ஆனால் ஒரு போட்டி துவங்கும் கடைசி நேரத்தில் மீண்டும் அதே பிரச்சினையை சொல்லி வெளியேறியிருக்கிறார்.

இதே நாளைக்கு மிக முக்கியமான போட்டியில் இந்த மாதிரியான ஒரு சூழ்நிலை வந்தால், நம்மால் உலக கோப்பையில் என்ன செய்ய முடியும்? எனவே காயம் இருந்தால் தேர்வு செய்யக்கூடாது. அதற்கு பதிலாக ஏதாவது புதிய வீரர்களிடம் போக வேண்டும். இவருக்கு பதிலாக திலக் வர்மாவையே தேர்வு செய்யலாம். எப்படியும் இவர்கள் அணியில் இரண்டு விக்கெட் கீப்பர்கள் இருப்பதால் சஞ்சு சாம்சனை தேர்வு செய்ய மாட்டார்கள்!” என்று கூறியிருக்கிறார்!