15 வருஷத்துல இப்படி நடந்ததே கிடையாது.. ரன் அடிக்கிறப்ப இதான் என் மனசுல இருந்துச்சு – விராட் கோலி பரபரப்பான பேச்சு!

0
18858
Virat

இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆசியக்கோப்பை தொடரில் இந்திய அணி 228 என்கின்ற மிகப்பிரமாண்டமான ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பாகிஸ்தான் அணியை புள்ளிப்பட்டியலில் பின்னே தள்ளி இருக்கிறது!

இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் டாசை இழந்தாலும் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரிடம் இருந்து நல்ல துவக்கத்தை பெற்றது. இது அடுத்து வந்து விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்களுக்கு நல்ல அடித்தளத்தை அமைத்தது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து வந்து விளையாடிய இந்திய ரன் மெஷின் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் மிகச் சிறப்பாக துவக்கத்தை பயன்படுத்திக்கொண்டு சதங்கள் விளாசி, இந்திய அணியை இரண்டு விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் என்கின்ற சிறப்பான இடத்திற்கு கொண்டு வந்தார்கள். இதில் விராட் கோலி 94 பந்துகளில் அதிரடியாக 122 ரன்கள் குவித்தார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 32 ஓவரில் எட்டு விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொண்டது. அவர்கள் அணியின் இரண்டு வீரர்கள் காயத்தால் பேட்டிங் செய்ய வரவில்லை.

இந்த போட்டியில் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட விராட் கோலி பேசுகையில் ” நான் இப்பொழுது என்னுடைய பேச்சை சீக்கிரத்தில் முடித்துக் கொள்ள விரும்புகிறேன். நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன். நான் அணிக்கு பல்வேறு வகைகளில் உதவ தயாராக இருக்கிறேன். இன்று கேஎல்.ராகுல் ஒரு நல்ல துவக்கத்தை பெற்றார். என்னுடைய வேலை ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வது மட்டுமே. எளிதான ரன்களை பெற முடிவதில் நான் பெருமைப்படுகிறேன். இரண்டு ரன்களுக்கு தள்ளுவதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

- Advertisement -

நான் எப்பொழுதும் பேன்சி கிரிக்கெட் ஷாட்கள் விளையாட மாட்டேன். எனக்கு அது சரி வருவதில்லை. இன்று 100 ரன்களை கடந்திருந்த காரணத்தினால் அந்த ஷாட் விளையாடுவதற்கு கொஞ்சம் முக்கியத்துவம் இருந்தது. நானும் கேஎல்.ராகுலும் வழக்கமான கிரிக்கெட் வீரர்கள். எங்களால் வழக்கமான முறையில் விளையாடி ரன் கொண்டுவர முடியும். இந்திய அணிக்கு இந்த பார்ட்னர்ஷிப் நல்ல அறிகுறி. மேலும் கே.எல்.ராகுல் இதன்மூலம் மீண்டும் வந்தது மகிழ்ச்சி.

நான் இன்று ரன்கள் எடுத்ததில் மகிழ்ச்சியாக இருந்தேன். ஒன்று இரண்டு என ரன்கள் ஓடும்பொழுது, நான் மீண்டும் நாளை மூன்று மணிக்கு விளையாட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். என்னுடைய 15 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் இப்படி ஒன்று நடந்தது கிடையாது. அதிர்ஷ்டவசமாக நானும் ராகுலும் டெஸ்ட் வீரர்கள். எனவே எங்களுக்கு நாளை வந்து தொடர்ந்து பேட்டிங் செய்வதில் எந்த பிரச்சினையும் இருக்காது. நான் நூறு டெஸ்டுகளுக்கு மேல் விளையாடி விட்டேன்.

இருந்தாலும் எனக்கு 35 வயது வருகிற நவம்பர் மாதம் ஆகிறது. எனவே என்னை நான் மீட்டெடுக்கும் வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும். என் தரப்பில் இருந்து மைதான ஊழியர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் அற்புதமான ஒரு வேலையை செய்திருக்கிறார்கள்!” என்று கூறி இருக்கிறார்!