“அடுத்த ரோகித் இந்த பையன்தான்.. ரீ-பிரெஷ் பண்ணிக்க யூஸ் பண்ணிக்குங்க” – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேச்சு!

0
629
Ruturaj

2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில், விராட் கோலி தலைமையில் இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறி வந்தது.

குறிப்பிட்ட அந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக பேட்ஸ்மேன்கள் இன்டெண்ட் காட்டாமல் விளையாடியதும், முதலில் பேட்டிங் செய்யும்பொழுது ஸ்கோரை செட் செய்ய தடுமாறுவதும் இருப்பதாக கூறப்பட்டது.

- Advertisement -

எனவே அடுத்து ரோகித் சர்மா கேப்டனாக வந்ததும் இந்த இரண்டையும் சரி செய்யும் விதமாக அனைவரும் அதிரடியாக விளையாடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படியே ரோகித் சர்மாவே முதலில் வந்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். தற்பொழுது நடந்து முடிந்த உலகக் கோப்பை வரை அது தொடர்ந்தது.

இந்த நிலையில்தான் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் டி20 உலக கோப்பைக்கு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற வருவார்களா என்கின்ற கேள்விக்குறி இருந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதா? வேண்டாமா? என்கின்ற குழப்பமும் நீடிக்கிறது.

தற்பொழுது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இளம் இடதுகை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் மற்றும் வலதுகை பேட்ஸ்மேன் ருதுராஜ் இருவரும் மிகச் சிறப்பான துவக்கத்தை தந்து வருகிறார்கள். ருதுராஜ் ஒரு முனையில் விக்கெட்டை காப்பாற்றி விளையாட, இன்னொரு முனையில் ஜெய்ஸ்வால் எடுத்ததும் அதிரடியில் ஈடுபடுகிறார். மாறிவரும் கிரிக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் போன்ற ஒரு பிளாஸ்டர் துவக்க இடத்தில் தேவைப்படுகிறது.

- Advertisement -

இதுகுறித்து பேசி உள்ள சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “ஐபிஎல் தொடரில் ஜோப்ரா ஆர்ச்சருக்கு எதிராக ஜெயஸ்வால் துவங்கிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. இந்தப் பையன் மிகவும் திறமைசாலி. ஜெய்ஸ்வால் டாப் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் இடத்தை கொண்டு வருகிறார். அனுபவத்தால் கட்டமைக்கப்படாத புத்துணர்ச்சி அவரிடம் இருக்கிறது. பந்தை பார்க்கிறார் உடனே அடிக்கிறார். இந்தியாவிற்கு அனைத்து வடிவங்களிலும் இந்தப் பையன் விளையாடுவார்!” என்று கூறியிருக்கிறார்.

மேலும் ஜெயஸ்வால் குறித்து சஞ்சய் மஞ்சுரேக்கர் மும்பை வீரரான ரோஹித் சர்மாவை விட்டுக் கொடுத்து பேசும் பொழுது “சர்வதேச அணிகளுக்கு எதிராக தற்பொழுது இந்திய அணி தனது இன்னொரு டி20 அணியை களம் இறக்கக்கூடிய இடத்தில் இருக்கிறது. இதைத்தான் ஐபிஎல் அடிப்படையில் செய்திருக்கிறது.

இந்தியா அவர்களின் அணுகு முறையை ரீ-பிரெஷ் செய்து கொள்ள விரும்பினால், ஜெயஸ்வால் இந்திய அணிக்காக ஒரு ஆளாக உருவாக முடியும். ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தற்பொழுது ரோகித் சர்மா என்ன செய்தாரோ, அதை ஜெயஸ்வாலால் செய்ய முடியும்!” என்று கூறியிருக்கிறார்!