“25 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை ஞாபகப்படுத்தியது இந்த நிகழ்வு” – சவுரவ் கங்குலி பேட்டி

0
182

உலக டி20 கிரிக்கெட் லீக் போட்டிகளுக்கெல்லாம் முன்மாதிரியான இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதுவரை 29 போட்டிகள் முடிவடைந்து இருக்கின்றன .

ஐபிஎல் 16 வது சீசன் தொடங்கி மூன்று வாரங்களும் 29 போட்டிகளும் முடிவடைந்த நிலையில் ராஜஸ்தான் அணி முதல் இடத்திலும் லக்னோ அணி இரண்டாம் இடத்திலும் சென்னை அணி மூன்றாம் இடத்திலும் இருக்கிறது .

- Advertisement -

இன்று மதியம் நடைபெறும் 30 ஆவது போட்டியில் லக்னோ அணியும் குஜராத் அணியும் மோத இருக்கின்றன . இந்த போட்டியில் லக்னோ அணி வெற்றி பெறும் பட்சத்தில் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும் . குஜராத் அணி வெற்றி பெற்றால் நான்காம் இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் .

இந்தத் தொடர் ஆரம்பித்து மூன்று வாரங்கள் முடிவடைந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெல்லி கேப்பிட்டல் அணி பத்தாவது இடத்தில் இருக்கிறது . அந்த அணி இதுவரை ஆடி இருக்கும் ஆறு போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியுடன் பத்தாவது இடத்தில் உள்ளது . இந்த முதல் வெற்றியின் மூலம் அந்த அணிக்கு புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது . இந்த வெற்றியில் இருந்து புதிய இலக்கை நோக்கி முன்னேறுவோம் என டெல்லி அணியின் கிரிக்கெட் இயக்குனர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்திருக்கிறார் .

இதுகுறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் ” இந்த முதல் வெற்றி 25 வருடங்களுக்கு முன்பு என்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் ரன்னை எடுக்கும் போது ஏற்பட்ட அழுத்தத்தை போன்று இருந்தது . இந்த முறை எங்கள் பக்கம் அதிர்ஷ்டம் இருந்தது நாங்கள் வெற்றி பெற்று விட்டோம் . ஒரு தொடரில் முதல் வெற்றி என்பது முக்கியமானது . தொடர்ந்து பயணிப்பதற்கு அந்த வெற்றி உத்வேகமாக அமையும்” என்று கூறினார்,

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இந்தத் தொடரின் துவக்கத்தில் இருந்தே நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம் . ஆனால் எங்கள் அணியின் பேட்டிங் சரியாக அமையவில்லை . ப்ரீத்வி ஷா மணிஷ் பாண்டே மிச்சல் மார்ஸ் ஆகியோருடைய பேட்டிங்கில் சிறப்பு காணும் செலுத்தி பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அவர்களின் பேட்டிங் ஃபார்ம் அணிக்கு மிகவும் முக்கியமானது . மேலும் அவர்கள் தங்களுடைய அணிக்காக சமீப காலங்களில் சிறப்பான பங்களிப்பை அளித்து வந்திருக்கின்றனர் . எங்களுக்கு நாளை ஒரு நாள் விடுமுறை இருக்கிறது நாளை மறுநாள் ஹைதராபாத் சென்று அந்த அணியுடன் உரையாட இருக்கிறோம் . அங்கே பேட்டிங் இருக்கு சாதகமான ஆடுகளமாக இருக்கும் என்று நம்புகிறேன் . இந்த வெற்றிப் பயணம் தொடரும்”என கூறி முடித்தார் கங்குலி.