“இந்த தோல்வி காயப்படுத்தும்.. காயப்படுத்தனும்.. அப்பதான் நாங்க திரும்பி வருவோம்!” – ஜோஸ் பட்லர் கோபமான பேச்சு!

0
655
Buttler

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணி இடம் அதிர்ச்சிகரமான தோல்வியை அடைந்திருக்கிறது.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்யாமல் இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைப் பயன்படுத்தி மிகச்சிறப்பாக விளையாடிய ஆப்கானிஸ்தான் 284 ரன்கள் குவித்தது. பவர் பிளேவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 79 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து பேட்டிங்கை துவங்கிய இங்கிலாந்து அணிக்கு எதுவுமே சரியாக அமையவில்லை. அந்த அணிக்கு ஹாரி புரூக் மட்டுமே 66 ரன்கள் எடுத்து கொடுத்தார். மற்ற யாரும் நல்ல வகையிலான ரன் பங்களிப்பையும் பேட்டிங் செயல்பாட்டையும் காட்டவில்லை.

இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணி இடம் அடைந்திருக்கும் தோல்வி நடப்பு உலகக் கோப்பை தொடரை சூடுபிடிக்க செய்திருக்கிறது என்று கூற வேண்டும். ஆனால் இதை இங்கிலாந்து எந்த வகையிலும் விரும்பாது என்பது உண்மை.

இந்த நிலையில் தோல்விக்கு பின் பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் “டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது ஏமாற்றமாக இருந்தது. முதல் பந்தே வைடாக லெக் சைடு பவுண்டரிக்கு சென்றது. அங்கிருந்தே ஆட்டத்தின் டோன் அமைந்துவிட்டது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணிக்கு வாழ்த்துக்கள். அவர்கள் எங்களை விட மிஞ்சி செயல்பட்டார்கள். எங்களுடைய செயல்முறை பேட் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் மோசமாக இருந்தது. இந்த மாட்ட கிரிக்கெட்டில் நாங்கள் விரும்பும் அளவுக்கு எங்களுடைய செயல்பாடு அமையவில்லை. இதுதான் நாங்கள் போட்டியில் வீழ்ந்த இடம்.

ஆப்கானிஸ்தான் சிறப்பான பந்துவீச்சு தாக்குதலை வைத்திருக்கிறார்கள். நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பனி வரவில்லை. ஆடுகளத்தில் இரண்டு வேறு விதமான பவுன்ஸ் இருந்தது. அவர்கள் ஸ்டெம்ப் லைனில் இருந்தார்கள். நாங்கள் இன்று போதுமான அளவுக்கு இல்லை.

இந்த தோல்வி நிச்சயம் காயப்படுத்தும். காயப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் மீண்டு வருவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க முடியும். ஒட்டுமொத்தமாக நாங்கள் இருக்க விரும்பும் வகையில் இல்லை. நாங்கள் எதை விரும்புகிறோமோ அப்படியே களத்திற்கு உள்ளேவும் வெளியேவும் இருக்க முயற்சி செய்வோம்!” என்று கூறி இருக்கிறார்!