“இந்த தோல்வி இந்தியா எங்களுக்கு கொடுத்த பெரிய பரிசு!” – பாகிஸ்தான் பயிற்சியாளர் வித்தியாசமான கருத்து!

0
3108
Pakistan

நேற்று ஆசியக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்தது. இந்தத் தோல்வி நடப்பு ஆசியக்கோப்பையில் ரன் ரேட்டில் பாகிஸ்தான் அணியை மிகவும் பின்தங்க வைத்திருக்கிறது!

மேலும் நேற்று இந்திய அணிக்கு எதிராக 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது, சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி ஒருநாள் கிரிக்கெட்டில் தோல்வியடைந்த ரன் வித்தியாசத்தில் இரண்டாவது பெரிய ரன் வித்தியாசமாகும்.

- Advertisement -

இலங்கையில் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை தொடருக்கு முன்பாக பாகிஸ்தான் அணி இலங்கையில் மூன்று போட்டிகள் கொண்ட ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது.

அந்தத் தொடரை பாகிஸ்தான அணி அதிரடியாக 3-0 எனக் கைப்பற்றியது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து அசத்தியது. இது அவர்களுடைய தற்கால கிரிக்கெட் பயணத்தில் முக்கிய இடமாகும்.

மேலும் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் நீடிக்கிறார். மேலும் இமாம் உல் ஹக் மற்றும் பகார் ஜமான் இருவரும் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட் மிக பலமான ஒன்றாக தற்போது உலக அளவில் இருந்து வருகிறது. இதன் காரணமாக ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி மிகப்பெரிய எதிர்பார்ப்பை தற்காலத்தில் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் நேற்று இந்திய அணிக்கு எதிராக மோசமான தோல்வியைத் தழுவி இருக்கிறது.

இதுகுறித்து பாகிஸ்தான் அணி தலைமை பயிற்சியாளர் பிராட்பர்ன் கூறுகையில் “கடந்த இரண்டு நாட்களாக எங்களுக்கு கிடைத்த பரிசுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்று நான் மிக உறுதியாக நம்புகிறேன்.

உலகின் சிறந்த வீரர்களுக்கு எதிராக அடிக்கடி விளையாட முடியாது. கடந்த மூன்று மாதங்களில் நாங்கள் தோல்வி அடையாத ஒரு அணியாக இருந்து வந்தோம். எனவே நாங்கள் ஒவ்வொரு நாளும் திரும்ப வர வேண்டும் ; நாங்கள் களத்தில் சிறப்பானவை செய்ய வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது. இந்த தோல்வி உண்மையில் கடந்த இரண்டு நாட்களில் எங்களுக்கு கிடைத்த சிறந்த பரிசு.

நாங்கள் போட்டியின் அனைத்து அம்சங்களிலும் தோற்றோம். இதற்கு சாக்குப்போக்கு சொல்ல முடியாது. கடந்த இரண்டு நாட்கள் நாங்கள் போட்டியில் நல்ல விதமாக செயல்படவில்லை. எங்கள் பந்து வீச்சு தாக்குதல் எவ்வளவு சிறப்பானது என்று அனைவரும் அறிவார்கள். ஆனால் சிறந்த அணிகள் அதை எதிர்க்கும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

எங்களுடைய பேட்டிங் யூனிட் கடந்த ஒரு மாதமாக க்ளிக் ஆகவில்லை. இதை நேர்மறையான ஒரு அறிகுறியாகத்தான் எடுத்துக் கொள்ளவேண்டும். அவர்கள் மீது எங்களுக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது. எங்களுடைய தேர்வில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இவர்கள் மீண்டும் சரியாக வருவார்கள்!” என்று நம்புகிறோம் என்று கூறியிருக்கிறார்!