இந்த சிஎஸ்கே வீரரை அப்போது நாங்கள் அடுத்த சச்சினாக வருவார் என்று நினைத்தோம் – சுவாரசியமான தகவலை பகிர்ந்த முன்னாள் இந்திய வீரர்!

0
4203
csk

கடந்த மாதம் இறுதியில் நடந்து முடிந்த ஐபிஎல் 16ஆவது சீசனின் சாம்பியன் பட்டத்தைச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றி அசத்தியது. இது அந்த அணிக்கு ஐந்தாவது சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது!

இந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியோடு தனது ஓய்வு முடிவை சிஎஸ்கே அணியின் நட்சத்திர, இந்திய முன்னாள் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு அறிவித்து ஓய்வு பெற்றார்.

- Advertisement -

இவர் 2003 ஆம் ஆண்டு இந்திய ஏ அணியில் இடம்பெற்ற பொழுது இருந்த எதிர்பார்ப்புகள் மற்றும் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பகர்ந்திருக்கிறார்.

இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “அம்பதி ராயுடு உடனான எனது முதல் சந்திப்பைப் பற்றிய ஒரு சிறுகதையை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன். அது 2003 ஆம் ஆண்டு, அப்பொழுது வெஸ்ட் இண்டீஸ் இந்திய ஏ அணியின் சுற்றுப்பயணத்திற்கு அம்பதி ராயுடு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அப்போது அந்தக் குழந்தைக்கு வயது 16!

அவர் அடுத்த சச்சின் டெண்டுல்கர் ஆக இருப்பார் என்ற நம்பிக்கையில் அப்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அந்தப் பையன் மிகவும் திறமையானவர், அற்புதமானவர். அவரால் பேட்டிங், பீல்டிங், பௌலிங் என்று எல்லாம் செய்ய முடியும்.

- Advertisement -

அப்போதைய எங்கள் அணியில் ஒரு ஆப் ஸ்பின்னர் இல்லை. எங்கள் அணியில் இடது கை சுழற் பந்துவீச்சாளர் முரளி கார்த்திக் மற்றும், வலதுகை லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா இருவரும் இருந்தார்கள்.

பேட்டிங்கில் எங்களிடம் கம்பீர், கானர் வில்லியம்ஸ், விவிஎஸ் லட்சுமணன், அபிஜித் காலே மற்றும் நான் ஆகியோர் இருந்தோம். இப்படியான ஒரு அணியில்தான் 16 வயதான அம்பதி ராயுடும் பேட்ஸ்மேனாக இருந்தார்.

அவருக்கு பேட்டிங்கில் கீழ் வரிசையில்தான் இடம் கிடைத்தது. இடையில் ஆஃப் ஸ்பின் பந்து வீசும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டார். அவரால் அதைச் சரியாக செய்ய முடியவில்லை.

சில பந்துகளைத் தன் கால்களிடமும், சில பந்துகளை பேட்மேன் கால்களிடமும் வீசினார். சில பந்துகளை ஃபுல் டாஸ் ஆகவும் வீசினார். இதற்கு நடுவில் அவர் விக்கெட் எடுக்கும் பந்துகளையும் வீசினார்.

வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் கடுமையாகப் பந்தை அடிப்பதால், அம்பதி ராயுடு பந்து வீச வரும்பொழுது எல்லாம், ஷார்ட் லெக் மற்றும் மிட் விக்கெட் ஃபீல்டர்கள் லேசாக பயப்பட்டது எனக்கு இப்போதும் நினைவில் இருக்கிறது.

இதையும் படிங்க… “நாங்கள் குஜராத் டைட்டன்சை பார்த்து பயந்தோம்; அவங்க பைனல் வரக்கூடாதுனு நினைச்சோம்” – அம்பதி ராயுடு ஓபன் டாக்!

ஃபீல்டிங் பொசிஷனில் ஃபயரிங் லைனில் நின்றிருந்தால் பயப்பட்டுதான் ஆக வேண்டும். இதனால் நான் அம்பதி ராயிடுவிடம் பந்தை ஷார்ட்டாக வீச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தேன்!” என்று பழைய நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார்!