“இது பாகிஸ்தானின் ஆண்டாக இருக்கலாம்” – வீரேந்திர சேவாக் கருத்து!

0
108
Sehwag

இந்த முறை ஆசியக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் இலங்கை ஆகிய மூன்று அணிகள் தங்களின் பிரதான வேகப்பந்துவீச்சாளரை காயத்தால் இழந்தே தொடருக்கு வந்தன!

ஆசியக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணி பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. காரணம், அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் மூன்று பிரதான வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டும் தான் இருந்தார்கள். ரவீந்திர ஜடேஜா, சாகல் மற்றும் ரவி பிஷ்னோய் என மூன்று ஸ்பின்னர்கள் இருந்தார்கள். ஆனால் பாகிஸ்தான் அணியில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் என இருந்தார்கள்.

- Advertisement -

ஆசிய கோப்பை தொடங்குவதற்கு முன்பாக தொடரை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கும் அணியாக இந்திய அணி கருதப்பட்டது. இறுதிப்போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ள அதிக வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டது.

ஆசிய கோப்பையில் முதல் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது. இதற்கடுத்த இரண்டாவது சுற்றில் இரண்டாவது முறையாக இந்திய அணி பாகிஸ்தான் அணியோடு மோதும் போதும் போது பாகிஸ்தான் அணி பதிலடியாக இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

தற்போது இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் அடுத்து இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் உடன் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதே சமயத்தில் ரன் ரேட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டியதாயிருக்கிறது. இதனால் இந்திய அணி அழுத்தத்தில் இருக்கிறது என்று கருதப்படுகிறது.

- Advertisement -

தற்போது இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு மற்றும் ஆசிய கோப்பையில் யார் கோப்பையை வெல்வார்கள் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரரான வீரேந்தர் சேவாக் இடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த வீரேந்திர சேவாக் “இந்தியா தற்செயலாக மற்றொரு போட்டியில் தோற்றால் தொடரில் இருந்து வெளியேறி விடுவார்கள். பாகிஸ்தான் தற்போது சாதகமான சூழ்நிலையில் உள்ளது ஏனென்றால் அவர்கள் ஒரு போட்டியில் வெற்றி பெற்று உள்ளார்கள் அவர்கள் அடுத்த போட்டியில் தோல்வி அடைந்தாலும் அதற்கு அடுத்த போட்டியில் வென்றால் போதுமானது. இலங்கை அணியும் இதே மாதிரியான சூழ்நிலையில் தான் இருக்கிறார்கள். ஆனால் இந்தியா ஒரு போட்டியை இழந்திருக்கிறது. இன்னொன்று இழந்தால் அவர்கள் அவுட் எனவே இந்தியா மீது அதிக அழுத்தம் இருக்கிறது” என்று கூறினார்.

மேலும் ஆசியக் கோப்பையை வெல்ல யாருக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கருத்து தெரிவித்த அவர் “பாகிஸ்தான் அணி ஆசியக் கோப்பையில் நீண்டநாட்களுக்கு பிறகு இறுதி போட்டியில் விளையாடும் என்று நினைக்கிறேன். நீண்ட நாட்களுக்கு பிறகு ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் இந்திய அணியை வீழ்த்தி இருக்கிறது எனவே இந்த ஆண்டு பாகிஸ்தானின் ஆண்டாக இருக்கலாம்” என்று கூறியிருக்கிறார்.