“இந்த பசங்க எனக்கு வேலையே தரதில்ல.. ரிங்குவ பார்த்தா அவர் ஞாபகம்தான் வருது!” – கேப்டன் சூரியகுமார் சுவாரசியமான பேச்சு!

0
6850
Surya

இந்திய முன்னணி நட்சத்திர வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடிய காரணத்தினால், சூரியகுமார் தவிர அனைவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டு, அவரையே கேப்டனாகவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் நியமித்தது.

இந்த நிலையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியை வழிநடத்தி முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் சூரியகுமார் யாதவ் தனது முதல் கேப்டன்சியில் வெற்றி பெற்றார்.

- Advertisement -

இன்று தொடரின் இரண்டாவது போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பனிப்பொழிவு இருக்கின்ற காரணத்தினால் இரண்டாவது பேட்டிங் செய்வது தான் சாதகமான விஷயமாக இருந்தது. மேலும் முதலில் பேட்டிங் செய்ய ஆடுகளமும் சாதகமாக இல்லை.

இப்படியான சூழலில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சூழ்நிலைகளை எல்லாம் பார்க்காமல் அடித்து நொறுக்கி 235 ரன்கள் குவித்தது. ருத்ராஜ், ஜெய்ஸ்வால் இஷான் கிஷான் என தொடர்ச்சியாக மூவரும் அரை சதம் அடித்தார்கள்.

இதற்குப் பிறகு ஆஸ்திரேலியா அணியை 191 ரன்களுக்கு சுருட்டி 44 ரன்கள் வித்தியாசத்தில் சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி இரண்டாவது வெற்றியை இந்த தொடரில் பெற்று வலிமையான முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

இன்று சூரியகுமார் பேட்டிங் செய்ய வந்த பொழுது எந்தவிதமான நெருக்கடியும் இல்லாமல், ஆட்டத்தை முழுவதுமாக இளம் வீரர்கள் கையில் எடுத்து அடித்தளத்தை தாண்டி மிகச் சிறப்பாக கட்டி எழுப்பியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வெற்றிக்குப் பின் பேசிய கேப்டன் சூரியகுமார் யாதவ் “எங்களுடைய வீரர்கள் இந்த போட்டியில் எனக்கு பெரிய அழுத்தத்தை உண்டாக்கவில்லை. அவர்களே பொறுப்பு எடுத்துக் கொண்டு விளையாடுகிறார்கள். போட்டிக்கு முன்பே முதலில் பேட்டிங் செய்ய தயாராக இருக்குமாறு கூறியிருந்தேன்.

இங்கு பனிப்பொழிவு மிக அதிகமாக இருக்கிறது. எனவே நாங்கள் இரண்டாவது பந்து வீசினால் இலக்கை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து பேசினோம்.

கடைசி ஆட்டத்தில் ரிங்கு சிங் பேட்டிங் செய்ய வந்த பொழுது அவரிடம் இருந்த அமைதியை பார்க்க அற்புதமாக இருந்தது. இது எனக்கு ஒருவரை நினைவூட்டியது. அவர் யார் என்று (தோனி) எல்லோருக்குமே தெரியும்!” என்று நகைச்சுவையாகக் கூறினார்!