“இதெல்லாம் ஒரு ஷாட்டா? இந்தியாவோட ரன் ரேட்டே போச்சு!” – ரோகித் சர்மாவை கடுமையாக விமர்சனம் செய்த கவுதம் கம்பீர்!

0
1408
Gambhir

நேற்று மழையின் காரணமாக இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி இன்று ரிசர்வ் டேவுக்கு வந்திருக்கிறது. இன்றைய நாளிலும் மழை ஆபத்துகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது!

நேற்றைய போட்டியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கில் இருவரது ஆட்டமும், அணுகுமுறையும் மிகச் சிறப்பாக இருந்தது. கில் ஆரம்பம் முதல் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்களை தாக்கி விளையாட, இன்னொரு முனையில் கேப்டன் ரோகித் சர்மா விக்கட்டை பாதுகாத்து, பவர்பிளே முடிந்து தாக்கி விளையாடினார். அந்த நேரத்தில் இளம் வீரர் கில் பொறுமை காட்டினார்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா ஆட்டம் இழந்த விதம் குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் ” ரோகித் சர்மா அவுட் ஆனவிதத்தில் மிகவும் ஏமாற்றம் அடைவார் என்று நினைக்கிறேன். அது மிகவும் மோசமான ஷாட். அந்த ஷாட் விமர்சிக்கப்பட வேண்டியது என்று அவருக்கே தெரியும். ஏனெனில் அந்தக் கட்டத்தில் பாகிஸ்தான் அணி மிகவும் கீழே இருந்தது.

ஒரு கட்டத்தில் இந்தியா 350, 375 ரன்கள் எடுக்கலாம் என்று தோன்றியது. ரோகித் சர்மா ஒரு மோசமான ஷாட்டை ஆடினார். அதற்கு அடுத்த ஓவரில் கில்லும் ஆட்டம் இழந்தார். பாகிஸ்தான் போன்ற ஒரு பந்துவீச்சு தாக்குதலுக்கு நீங்கள் ஒரு சிறிய வாய்ப்பு கூட தரக்கூடாது.

நீங்கள் அவர்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்தீர்கள். நீங்கள் இரண்டு ஓவர்களில் 30 ரன்கள் தந்த பந்துவீச்சாளருக்கு உங்கள் விக்கெட்டை தந்தீர்கள். அவர் சிறப்பாக வீசி நீங்கள் அழுத்தத்திலிருந்து அப்படி விளையாடி இருந்தால் பரவாயில்லை. எங்கள் தொடர்ந்து நின்று இருந்தால் அவர் தொடர்ந்து இரண்டு, மூன்று பந்துகளை ஒரு ஓவருக்கு உங்களுக்கு அடிக்க கொடுத்திருப்பார்.

- Advertisement -

சரியாக அடிக்க முயற்சி செய்யும்பொழுது ஆட்டம் இழப்பது வேறு. சிக்ஸர் அடிக்க முயற்சி செய்ததாக சொல்கிறீர்கள். ஆனால் அங்கே சிங்கிள் பவுண்டரி சிக்சர் எதையும் அடிக்க முயற்சி செய்ததாக தெரியவில்லை. மிக உறுதியாக நின்று ஒரு அரைசதம் அடித்துக் கொடுத்தார். நல்ல துவக்கத்தை ஏற்படுத்தினார். ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணியின் கண்ணோட்டத்தில் பார்த்தால் அது ஒரு மோசமான ஷாட்!” என்று தன்னுடைய விமர்சனத்தை பதிவு செய்திருக்கிறார்!

ரோகித் சர்மா ஆட்டம் இழந்த விதம் குறித்து நேற்றைய போட்டியில் வர்ணனையாளராக இருந்த பலரும் இதே விதமான கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள். ரோஹித் சர்மா அந்த பந்தை முழுமையாக அடித்து ஆட்டம் இழந்து இருந்தால் கூட பரவாயில்லை, அரைகுறையாக அந்த திசையில் ஆட நினைத்தது மிகவும் தவறு, அது மேற்கொண்டு இன்னொரு விக்கெட்டை வாங்கி, இந்தியாவின் ரன்ரேட்டை குறைத்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்!