இங்கு எப்படி ஆட வேண்டும் என்று பாடம் எடுக்கிறார்கள்” “எங்களது தோல்விக்கு அவர்கள் இருவரும் தான் முக்கியமான காரணம்” – போட்டிக்கு பின் பேட்டியளித்த டேவிட் வார்னர்!

0
343

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசனில் ஐந்தாவது நாளான இன்று டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதின . இந்தப் போட்டி இந்திய தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்தப் போட்டியிலும் டாஸ் வென்ற குஜராத் அணி டெல்லி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

குஜராத் அணியின் சிறப்பான பந்துவீச்சால் டெல்லி அணி 20 ஓவர்களுக்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது . குஜராத் அணியின் பந்துவீச்சில் முகமது சமி 3 விக்கெட்டுகளையும் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அல்சாரி ஜோசப் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் .

- Advertisement -

162 ரன்கள் என்ற எளிதான இழப்புடன் களமிறங்கினாலும் குஜராத் அணி பவர் பிளையிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்தது. சாய் சுதர்சன் மற்றும் டேவிட் மில்லர் சிறப்பாக விளையாடி குஜராத் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இந்தப் போட்டியோடு சேர்த்து டெல்லி அணி தனது முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவி இருக்கிறது இந்நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் ” ஆரம்பத்தில் பந்து ஸ்விங் ஆனது ஆச்சரியமாக இருந்தது. எதிர்பார்த்ததை விட ஸ்விங் அதிகமாக இருந்தது. விக்கெட்டின் இன்னொரு முனையில் பந்து தாழ்வாக சென்றது. இதுபோன்ற ஆடுகளங்களில் எப்படி ஆட வேண்டும் என்பதை குஜராத் வீரர்கள் இன்று கற்றுக் கொடுத்தார்கள். இந்த மைதானத்தில் இன்னும் ஆறு போட்டிகளில் நாங்கள் விளையாட வேண்டி இருக்கிறது . அப்போது இந்த விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” எனக் கூறினார் .

மேலும் தொடர்ந்து பேசியவர் ” போட்டியின் 15 வது ஓவர் வரை நாங்கள் ஆட்டத்தில் தான் இருந்தோம். அதன்பிறகு மில்லர் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் ஆட்டத்தையும் எங்களிடம் இருந்து பறித்துச் சென்றனர் . சாய் சுதர்சன் மிகவும் அருமையாக ஆடினார். மில்லர் தன்னுடைய வழக்கமான பாணியில் அதிரடியாக ஆட்டத்தை முடித்தார். மேலும் இறுதி நேரத்தில் பனிப்பொழிவும் அதிகமாக இருந்தது. நாங்கள் 180 முதல் 190 ரன்கள் எடுத்திருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கலாம் . ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்தே அக்சர் பட்டேல் இன்று பந்து வீசவில்லை” என கூறி முடித்தார் டேவிட் வார்னர்

- Advertisement -