“உனக்கென்னப்பா உன் வாய்.. என்ன வேணும்னாலும் பேசுவ”.. இந்தியாவிற்கு எதிராக பேசிய ரிக்கி பாண்டிங் – பதிலடி கொடுத்த ரோகித் சர்மா!

0
2737

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியாவிற்கு வாய்ப்பில்லை என்று எதிராக பேசிய ரிக்கி பாண்டிங்-கிற்கு சமீபத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் ரோகித் சர்மா.

2021 முதல் 2023ஆம் ஆண்டுகளுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக் போட்டிகள் முடிவடைந்து, அதில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்கள் பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இரு அணிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளன.

- Advertisement -

வருகிற ஏழாம் தேதி முதல் 11ஆம் தேதி வரை பைனல் நடைபெறுகிறது. இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த பைனலுக்காக இரு அணிகளும் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பே இங்கிலாந்து சென்று தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன. சில இந்திய வீரர்கள் ஐபிஎல் பிளே-ஆப் போட்டிகளை முடித்துவிட்டு இங்கிலாந்து சென்றனர்.

இந்த பைனலில் எந்த அணி வெல்லும்? யார் சிறப்பாக செயல்படுவார்? என்கிற பல்வேறு கணிப்புகள் வெளிவந்தன. அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங், “போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கு ஆஸ்திரேலியா அணி பலமுறை விளையாடி போட்டிகளை வென்ற அனுபவமும் வரலாறும் கொண்டிருப்பதால் இந்தியாவை விட ஒரு படி அதிக வாய்ப்பு வெற்றி பெறுவதற்கு ஆஸ்திரேலியாவிற்கு தான் இருக்கிறது.” என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட ரோகித் சர்மா தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். ரோகித் சர்மா பேசியதாவது:

- Advertisement -

“அது ரிக்கி பாண்டிங் கருத்து. அவரது பார்வையில் அவர் பேசியிருக்கிறார். வல்லுநர்கள் போர்வையில் அவர் இருப்பதால் அப்படித்தான் ஏதாவது ஒரு பக்கம் பேச வேண்டும். இங்கு போட்டிகளை ஆராய்ந்து பல்வேறு விதமான கருத்துக்கள் மற்றும் கணிப்புகளை பலரும் முன்வைப்பர். அது அப்படியே நிகழ்ந்து விட வேண்டும் என்கிற நிர்பந்தம் இல்லை. உள்ளே விளையாடும் வீரர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பொருத்தே ஆட்டம் மாறுபடும்.

எந்த அணி எப்போது வெல்லும் என்கிற கணிப்பு மட்டுமே சொல்ல முடியும். அது உண்மையாகிவிடாது. இந்த கண்டிஷன் இந்திய வீரர்களுக்கும் எடுபடும். எங்களது அணியிலும் வேகப்பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்தும் பேலன்ஸ் ஆக இருக்கிறது நாங்களும் பல வருடங்களாக இங்கிலாந்தில் விளையாடிய அனுபவமும் புள்ளிவிவரங்களும் கொண்டிருக்கிறோம் அதற்கேற்றவாறு செயல்படுவோம் என்று தெளிவுபடுத்தினார் ரோகித் சர்மா