“இதைப் பற்றி புலம்புவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை” – ஆஸ்திரேலியாவிற்கு கவாஸ்கர் பதிலடி!

0
319

ஆஸ்திரேலியா அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது . இந்த சுற்றுப்பயணத்தின் போது அந்த அணி நான்கு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை போட்டித் தொடர் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடர்களில் ஆட இருக்கிறது . இதற்காக பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி கடந்த வாரம் பெங்களூர் வந்தடைந்தது .

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பையின் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது . டெஸ்ட் போட்டிகளுக்காக இரண்டு அணிகளுமே முழு வீச்சில் ஆயத்தம் ஆகி வருகின்றன . சமீபகாலமாகவே இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டிகளில் அனல் பறந்து வருகிறது . சமீபத்தில் கூட ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் ஆசஸ் தொடரை விட இந்திய அணியின் உடனான இந்தப் போட்டி தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார். இதிலிருந்தே இந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை போட்டித் தொடர் இரு அணிகளுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் என்பதை நாம் அறியலாம் .

- Advertisement -

இந்த டெஸ்ட் போட்டி தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே இரண்டு அணிகளின் தரப்பிலும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விமர்சிகர்களுக்கு இடையேயான வார்த்தை யுத்தங்கள் தொடங்கி விட்டன . மேலும் ஆஸ்திரேலியா அணியினரும் உளவியல் விளையாட்டுகளை ஆரம்பித்து விட்டனர் . இது தொடர்பாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் இந்திய ஆடுகணங்களின் தன்மையைப் பற்றி விமர்சனம் செய்து வந்தனர் . இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிரபலமான கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் ஆஸ்திரேலியா முன்னால் வீரர்களின் விமர்சனங்களுக்கு கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறார் .

இது தொடர்பாக அவர் மிட் டே பத்திரிக்கைக்கு எழுதியுள்ள கட்டுரையில்” இந்திய அணியின் ஆடுகளங்களின் தரத்தை பற்றி விமர்சிக்க ஆஸ்திரேலியர்களுக்கு எந்த உரிமையும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ள” அவர் “கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா அணியுடன் ஆன பிரிஸ்பேன் போட்டியின் ஆடுகளங்கள் விமர்சனத்திற்கு உள்ளானதை மறந்துவிடக்கூடாது”எனக் கூறினார் . மேலும் இதுபற்றி விரிவாக எழுதியுள்ள அவர் ” பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியானது இரண்டே நாட்களில் முடிவடைந்தது நமக்கு நினைவிருக்கலாம். அந்த ஆடுகளத்தை விடவா இந்திய ஆடுகளங்கள் ஆபத்தானவை? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

அந்தக் கட்டுரையில் இது பற்றி குறிப்பிட்டுள்ள கவாஸ்கர் ” கடந்த முறை அவர்கள் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்த போதும் இதே போன்று தான் ஆடுகளத்தை குறை கூறியிருந்தார்கள் என்பதை சுட்டிக்காட்டி உள்ள கவாஸ்கர் ஒரு டெஸ்ட் போட்டியை இரண்டு நாட்களில் முடிக்கும் ஆடுகளத்தை தயாரித்த நாட்டிற்கு இந்திய ஆடுகளங்களைப் பற்றி புலம்புவதற்கு எந்த உரிமையும் இல்லை என கடுமையாகச் சாடியுள்ளார் . மேலும் அந்தக் கட்டுரையில் ” இரண்டே நாட்களில் டெஸ்ட் போட்டிகள் முடிந்த பிரிஸ்பேன் ஆடுகளத்தில் பந்துகள் பெரும்பளவில் எகிறி வந்தன . இது வீரர்களின் உயிருக்கும் உடலுக்கும் ஆபத்தான ஒரு விஷயம் . இந்தியாவில் இருக்கக்கூடிய டர்னர் ஆடுகளங்களை பொறுத்தவரை அது பேட்ஸ்மேன்களின் ஆட்ட தொழில்நுட்பத்திற்கும் அவர்களது தற்காப்பு ஆட்டத்திற்கும் தான் ஆபத்தானது என்று சுட்டிக் காட்டியுள்ளார் .

- Advertisement -

மேலும் தொடர்ந்து கூறியுள்ள அவர் ” பிரிஸ்பேனில் இரண்டு நாட்களில் முடிந்த டெஸ்ட் மேட்சில் இரண்டு அணியின் சிறந்த வீரர்களுமே மிகவும் அச்சத்துடனே பேட்டிங்கை அணுகினர்” என்று குறிப்பிட்டுள்ள கவாஸ்கர் ஆஸ்திரேலியா அணியின் பத்திரிக்கையாளர்கள் அதுபோன்ற ஆடுகளங்களை பந்துவீச்சாளர்களுக்கும் ஒரு வாய்ப்பான ஆடுகளங்கள் என்று கூறி சமாளித்தனர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் “அதுபோன்ற ஆடுகளங்கள் பந்துவீச்சாளர்களுக்கு ஒரு வாய்ப்பு என்றால் பந்துகள் அதிக அளவில் திரும்பும் இந்திய ஆடுகளங்களை கண்டு ஏன் புலம்ப வேண்டும்?” என கேள்வி எழுப்பியுள்ளார். “இந்திய ஆடுகளங்களில் சுழற் பந்துவீச்சை ஒரு பேட்ஸ்மேன் ஆடுவது என்பது பந்துவீச்சாளருடன் அவருக்கு உளவியல் ரீதியான விளையாட்டுக்களும் உள்ளன” என்று தெரிவித்திருக்கிறார் . “இதன் காரணமாகவே துணை கண்டத்தில் சதம் அடிப்பவர்கள் உலக அளவில் சிறந்த பேட்ஸ்மேன்களாக பாராட்டப்படுகின்றனர்” என்று கூறி முடித்தார் கவாஸ்கர் .