“தப்பு பண்ணிட்டாங்க..ஹர்திக் பாண்டியா இடத்துல இவங்க 3 பேர்ல ஒருத்தரை எடுத்து இருக்கனும்!” – இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்!

0
6220
Hardik

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கும் ஒரே விஷயம் காயத்தால் ஹர்திக் பாண்டியா விளையாட முடியாமல் விலகி இருப்பது மட்டும்தான்.

இந்த நிலையில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான அவருடைய இடத்திற்கு இப்படியான இன்னொரு ஆல் ரவுண்டரை கொண்டு வருவதற்கு பதிலாக முழுமையான வேகப்பந்துவீச்சாளராக பிரசித் கிருஷ்ணாவை கொண்டு வந்திருக்கிறார்கள்.

- Advertisement -

இந்தச் செய்தி வெளியானவுடன் இது குறித்து சமூக வலைதளத்தில் பல மாறுபட்ட கருத்துக்களை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வெளிப்படுத்தி வந்தார்கள். இந்தத் தேர்வு மிகவும் முரணாக இருக்கிறது என்பது அவர்களுடைய கருத்தாக இருந்தது.

இந்த நிலையில் இது குறித்து நேற்று பேசியிருந்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியிருந்தபொழுது, தங்களுக்கு சுழற் பந்துவீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள், ஆனால் வேகப்பந்து வீச்சுக்கு சரியான மாற்று வீரர்கள் இல்லை அதனால் இவரை தேர்வு செய்தோம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “ஹர்திக் பாண்டியா இடத்திற்கு தற்பொழுது பிரசித் கிருஷ்ணா வந்திருக்கிறார். இங்கு கேள்வி என்னவென்றால் ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டர். பிரசித் கிருஷ்ணா வேகப்பந்துவீச்சாளர்.

- Advertisement -

இதன் மூலம் தெரிய வருவது என்னவென்றால் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் 3 வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து விளையாட இருப்பதாக தெரிகிறது. எனவே இந்த இடத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஒரு மாற்று வீரர் அவர்களுக்கு தேவையாக இருக்கிறது.

அவர்கள் இந்த இடத்தில் ஒரு ஆல் ரவுண்டர் பற்றி யோசித்து இருக்கலாம். அவர்கள் அக்சர் படேல், சிவம் துபே மற்றும் தீபக் சகர் கணக்கில் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி எதையும் செய்ய முன்வரவில்லை. அவர்கள் தங்களுக்கு சரியான வேகப்பந்துவீச்சாளர்கள் வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

மேலும் பிரசித் கிருஷ்ணா தேர்வின் மூலம் நமக்குத் தெரியவரும் இன்னொரு விஷயம் என்னவென்றால், இந்தியாவில் ஹர்திக் பாண்டியாவின் இடத்திற்கு இன்னொரு வீரர் இல்லை என்பதுதான். ஆறு பேட்டர்கள் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் என்பதுதான் இந்திய அணியின் முடிவாக இருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!