“சிஎஸ்கேவில் தோனி அப்படி ஒரு ரோல் கொடுத்தார்.. ஆனால் ரோகித் சர்மா எனக்கு கொடுத்ததோ..”! – ரகானே பேட்டி!

0
1486

என்னால் அதிரடியாகவும் விளையாட முடியும். அதற்கு முன்பு இருந்த அணிகளில் அப்படிப்பட்ட ரோல் கிடைக்கவில்லை. அதேபோல் ரோகித் சர்மா எனது கொடுத்திருக்கும் ரோல் இது! என்று தனது சமீபத்திய பேட்டிகள் பேசி உள்ளார் ரகானே.

அஜிங்கிய ரகானே சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கடைசியாக 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன் பிறகு கிட்டத்தட்ட 16 மாதங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இடம் பெறவில்லை.

- Advertisement -

ரஞ்சிக்கோப்பையில் 11 இன்னிங்ஸில் கிட்டத்தட்ட 630 ரன்கள் விலாசி மீண்டும் பார்மிற்கு திரும்பினார். இவரை ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி எடுத்து நம்பிக்கை வைத்தது. அதற்கு பலன் அளிக்கும் விதமாக 172 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி 326 ரன்கள் விலாசினார்.

இவர் மீது நம்பிக்கை வைத்த பிசிசிஐ மீண்டும் டெஸ்ட் அணிக்கு எடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலிலும் விளையாட வைக்கப்பட்டார். முதல் இன்னிங்சில் 89 ரன்கள் இரண்டாவது இன்னிங்ஸில் 46 ரன்கள் என இவர் ஒருவர் மட்டுமே பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்பட்டார்.

தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் டெஸ்ட் தொடரில் எடுக்கப்பட்டு மீண்டும் துணை கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் துவங்குவதற்கு முன்பு பேட்டி அளித்த ரகானே பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் சிஎஸ்கே அணியில் செயல்பட்டது குறித்தும் தற்போது ரோகித் சர்மா தலைமையில் விளையாடுவது குறித்தும் பேசி உள்ளார்.

- Advertisement -

“சிஎஸ்கே அணி எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தது. அதனால் என்னுடைய அதனுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். மற்ற அணிகளில் அந்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. என்னை ஆங்கரிங் இன்னிங்ஸ் விளையாட சொல்வார்கள் அதற்காக நான் அப்படி விளையாடினேன்.

என்னுடைய பேட்டிங்கில் எந்தவித மாற்றமும் இல்லை. என்னுடைய அணுகுமுறையை மாற்றிக் கொண்டேன். நான் எப்படி விளையாட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்களோ அப்படி விளையாடுவேன்.

தற்போது ரோகித் சர்மா தலைமையில் விளையாடுகிறேன். அவரும் அணையில் உள்ள வீரர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கிறார். வீரர்களை நன்றாக நடத்துகிறார். அவர் எனக்கு என்ன ரோல் கொடுக்கிறாரோ அதை நான் வெளிப்படுத்துவேன் அதற்கேற்றார் போல விளையாட முயற்சிப்பேன் என்றார்