“36 ரன்னுக்கு 5 விக்கெட் தந்தாங்க.. பவுலிங்தான் காயப்படுத்தும்!” – பாகிஸ்தானுக்கு பரிதாபப்பட்ட டேவிட் வார்னர்!

0
1689
Warner

ஆஸ்திரேலியா அணி தன்னுடைய முதல் இரண்டு ஆட்டத்தில் நடப்பு உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளிடம் தோல்வி அடைந்தது.

இதன் காரணமாக அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு மிகவும் மோசமான சூழலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இதற்கு அடுத்து நெதர்லாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டாவது வெற்றி பெற்றிருக்கிறது.

- Advertisement -

இன்று டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு டேவிட் வார்னர் மற்றும் மிட்சல் மார்ஸ் இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 259 ரன்கள் பார்ட்னர்ஷிப் தந்து அசத்தினார்கள். இருவருமே சதம் அடித்தார்கள்.

இதில் டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி 163 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் பழைய டேவிட் வார்னரை பார்க்க முடிந்தது. பாகிஸ்தான் பந்துவீச்சை குறிப்பாக அதிவேக ஹாரிஸ் ரவுப் பந்துவீச்சை சிதைத்து விட்டார். முதல் பதினைந்து பந்துகளில் அவர் அரை சதத்தை பந்துவீச்சில் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இன்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற டேவிட் வார்னர் பேசும்பொழுது “தற்பொழுது இடுப்பில் ஏற்பட்ட வலி கொஞ்சம் பரவாயில்லை. தசைப்பிடிப்பு நீடிக்கிறது. மார்ஸ் உடன் சேர்ந்து விளையாடுவது அருமையாக இருக்கிறது. இந்த விக்கெட்டில் நாங்கள் நிலைத்து நின்றதும், அடுத்து வரக்கூடிய பேட்ஸ்மேன்களுக்கு நிலைமையை எளிதாக்க நினைப்போம்.

- Advertisement -

எனது திறமைகளை அர்ப்பணித்து பேட்டிங் செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. நேற்று பயிற்சியில் நல்ல முறையில் ஹிட் அடித்தேன். பந்து பேட்டின் மத்தியில் பட்டது. இன்று மைதானத்தில் விளையாடும் போது அது உதவியது. நானும் மார்ஷும் 35 ரன் வரை களத்தில் நிற்க முயற்சி செய்தோம். பின்பாதியில் அடித்து விளையாட நினைத்தோம்.

இறுதியில் பெரிய ரன்களுக்கு செல்வதற்கு அதிகம் உழைக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் அதை ஒரு குழுவாகச் செய்கிறீர்கள். ஒவ்வொரு ரன்னும் மதிப்புமிக்கது. விக்கெட்டுகளுக்கு இடையே வேகமாக ரன் ஓடுவது என் டிஎன்ஏ வின் ஒரு பகுதி.

கம்மின்ஸ் மற்றும் ஸ்டாய்னிஸ் இருவரும் பந்துவீச்சில் சிறப்பான விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். பாகிஸ்தான் கடைசி 36 ரன்களுக்கு ஐந்து விக்கெட் இழந்தது. ரன் ரேட் முக்கியம் அளிக்கும் ஒரு தொடரில், இது கவலை அளிக்கும் விஷயம். ஆனால் அவர்களுடைய பந்துவீச்சுதான் அவர்களை அதிகம் காயப்படுத்தி இருக்கும் என்று கூறியிருக்கிறார்!