அடுத்த டெஸ்டில் அவரை வெளியே அனுப்பினால், சொந்த செலவில் சூனியம் வைப்பதற்கு சமம் – ஆஸ்திரேலியாவை எச்சரித்த மைக்கல் கிளார்க்!

0
7024

முதல் டெஸ்டில் இந்த ஆஸ்திரேலியா வீரரை அணியில் எடுத்து வைத்துக்கொண்டு மிகப் பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டார்கள் ஆஸ்திரேலிய அணியினர் என்று பேசியுள்ளார் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. வருகிற 17-ஆம் தேதி டெல்லி மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் தொடங்கி அவர்களது பந்துவீச்சு மற்றும் பேட்டிங் வரையில் அனைத்துமே அவர்களது தரத்திற்கு மிகவும் குறைவாகவே இருந்தது. பிளேயிங் லெவனில் யார் யார் இருக்க வேண்டும் என்பதில் மிகப்பெரிய சிக்கல் நிலவியது.

உலகின் நம்பர் 4 டெஸ்ட் பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் வெளியில் அமர்த்தப்பட்டு அவருக்கு பதிலாக நம்பர் 5 இடத்தில் மேட் ரென்சா பிளேயிங் லெவனில் எடுத்துவரப்பட்டார். இந்த முடிவு ஆஸ்திரேலிய அணிக்கு ஏதுவாக அமையவில்லை.

அதேபோல் அவர்களது நட்சத்திர சுழல்பந்துவீச்சாளர் நேதன் லையன் பந்துவீச்சு எதிர்பார்த்த அளவிற்கு எடுபடவில்லை. நம்பிக்கையாக ஓபனிங் செய்ய அனுமதிக்கப்பட்ட முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் இரண்டு இன்னிங்ஸிலும் சொதப்பினார். இப்படி பல குளறுபடிகள் மற்றும் சோதப்பல்கள் முதல் டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலியா அணியின் மத்தியில் நடைபெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேட் ரென்சா வெளியில் அமர்த்தப்பட்டு டிராவிஸ் ஹெட் உள்ளே எடுத்துவரப்பட்டால் துப்பாக்கி எடுத்து தங்கள் காலிலேயே சுட்டுக் கொள்வதற்கு சமம் என்று கடுமையாக விமர்சித்து இருக்கிறார் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் கிளார்க்.

அவர் பேசியதாவது:

“முதல் டெஸ்ட் போட்டியில் டிராவிஸ் ஹெட் நம்பர் 5 இடத்தில் விளையாட வைக்கப்பட்டிருக்க வேண்டும். அதையும் மீறி ஆஸி.,அணியினர் செய்த மாற்றம் சரியாக அமையவில்லை. மேலும் இந்த தவறு செய்து விட்டோம் என்று அவர்கள் ஒப்புக் கொண்டிருக்கலாம். ஆனால் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று அவ்வளவு தைரியமாக பேசிவிட்டார்.

அவர் இப்படி பேசிய பிறகு இரண்டாவது டெஸ்டில் மேட் ரென்ஷாவை வெளியில் அமர்த்திவிட்டு டிராவிஸ் ஹெட்-ஐ உள்ளே எடுத்து வந்தால் தவறு செய்து விட்டு அதை மறைப்பதற்கு சமம். 2வது டெஸ்டில் மாற்றம் செய்யலாமா? வேண்டாமா? என்கிற சிக்கலுக்குள் ஆஸ்திரேலியா அணியினர் மாட்டிக்கொண்டனர். அனைத்தையும் மீறி மாற்றம் செய்தால் தங்கள் காலில் தாமே சுட்டுக் கொள்வதற்கு சமமாக அமைந்து விடும்.” என்று விமர்சித்து இருக்கிறார்.