ஆப்கானிஸ்தான் பவுலர் பண்ணதை இவங்க பண்ணல ; நான் அந்த பவுலர்கிட்ட மோசமா நடந்துக்க விரும்பல – தோல்விக்குப் பின் ஹர்திக் பாண்டியா!

0
3625
Hardik pandya

குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த பரபரப்பான போட்டியில் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நான்கு பந்துகள் மீதம் இருக்கையில் ராஜஸ்தான் அணி குஜராத் அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் நான்கு வெற்றிகள் உடன் முதலிடத்தை தக்க வைத்தது!

டாசை தோற்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணிக்கு பவர் பிளேவில் 42 ரன்கள் மட்டுமே வந்தது. பிறகு ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில், மற்றும் டேவிட் மில்லர், அபினவ் மனோகர் அதிரடி காட்ட 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் கிடைத்தது.

- Advertisement -

இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல் அணிக்கு 11ஆவது ஓவரில் நான்கு விக்கெட்டுகள் போய் 55 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்திருந்தது. இதற்குப் பிறகு கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியில் இறங்க ரன்கள் குவிய ஆரம்பித்தது.

சஞ்சு சாம்சன் அரை சதம் அடித்து வெளியேற பொறுப்பை ஏற்ற ஹெட்மையர் அரைசதம் கடந்து மிகச் சிறப்பாக ஆட்டத்தை நிறைவு செய்து அணியை வெல்ல வைத்தார்.

போட்டி முடிந்து தோல்விக்கு பின் பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா “இதுதான் இந்த ஆட்டத்தின் அழகு. ஆட்டத்தின் முடிவு தெரியும் வரையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் ஆட்டம் முடியாது. இது எங்களது வீரர்களுக்கு ஒரு பாடம். இது எங்களுக்கு ஒரு குறையும் ஆகும். ஜோஸ் லிட்டிலுக்கு பதில் நூர் அகமதுவை எடுத்ததற்கு காரணம், அவரது லைன் மற்றும் லென்த்தை உடனே பிக்கப் செய்வது கடினம். அவர் உண்மையில் நன்றாக பந்து வீசினார். அவரிடம் நான் கடுமையாக நடந்து கொள்ள விரும்பவில்லை. அவர் எங்களுக்கு சஞ்சு சாம்சன் விக்கட்டை எடுத்து ஒரு திருப்பு முனையையும் ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால் எங்களது மற்ற பந்துவீச்சாளர்கள் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” இது மிகவும் நீண்ட ஒரு தொடராகும். நாங்கள் இந்த போட்டியில் வென்றிருந்தாலும், நாங்கள் இன்னும் நல்ல கிரிக்கெட்டை விளையாடி இன்னும் நிறைய போட்டிகளை வென்றுதான் ஆகவேண்டும். இன்னிங்ஸ் இடைவேளையின் போது நாங்கள் கொஞ்சம் ரன்களை குறைவாக எடுத்திருப்பதாக நான் உணர்ந்தேன். அவர்கள் சில நல்ல ஓவர்களை வீசினார்கள். ஆனால் நாங்கள் இன்னும் கொஞ்சம் கடுமையாக மோதி ரன்கள் எடுத்திருக்க வேண்டும். நான் வெளியே இருந்து ஆட்டத்தை பார்த்த பொழுது ஒரு 10 ரன்கள் குறைவாக இருந்தது!” என்று கூறியிருக்கிறார்!