இவர்கள் எனக்கு ஃபேர்வெல் தர இவ்வளவு கூட்டமாக வருகிறார்கள் ; ஓய்வு பற்றி மறைமுகமாக பேசி விட்ட தோனி!

0
7813
Dhoni

பதினாறாவது ஐபிஎல் சீசனில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் ஐந்து வெற்றிகள் உடன் முதலிடத்தை பிடித்தது!

இந்த போட்டியில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கான்வே 56, சிவம் துபே 51, ரகானே 71 என மூன்று அதிரடி அரை சதங்கள் வர மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 20 ஓவர்களில் 235 ரன்கள் வந்தது.

- Advertisement -

இதை அடுத்து மிகப்பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய கொல்கத்தா அணிக்கு நல்ல துவக்கம் எதுவும் அமையவில்லை. காயமடைந்த ஜேசன் ராய் 61 ரன், இறுதிவரை களத்தில் நின்ற ரிங்கு சிங் 53 ரன்கள் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெற்றிக்குப் பின் பேசிய சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ” இவ்வளவு எண்ணிக்கையில் திரண்டு வந்த ரசிகர்களுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இவர்களில் பெரும்பாலானவர்கள் அடுத்த முறை கேகேஆர் ஜெர்சியை அணிந்து வருவார்கள். இவர்கள் எனக்கு பிரிவு உபச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த கூட்டத்திற்கு மிக நன்றி!” என்று கூறினார்!

தொடர்ந்து பேசிய மகேந்திர சிங் தோனி
” வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது வேலையை செய்கிறார்கள். அதேபோல் நடுவில் சுழற் பந்துவீச்சாளர்களும் பந்து சிறப்பாக செயல்படுகிறார்கள். மைதானத்தின் ஒரு பக்கம் பவுண்டரி நீளம் குறைவானது. எனவே ஆரம்பத்தில் விக்கட்டுகளை வீழ்த்தி அழுத்தத்தை அவர்கள் மீது தக்க வைக்க வேண்டி இருந்தது. கொல்கத்தா அணியில் நல்ல பவர் ஹிட்டர்கள் இருப்பதற்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும்!” என்று கூறினார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” அணியில் யாராவது காயம் அடைந்தால் எதுவும் செய்ய முடியாது. இளைஞர்களை உற்சாகப்படுத்தி நம்பிக்கை ஊட்டி செயல்பட வைக்க வேண்டியதுதான். இப்படி எங்களுக்கு வரக்கூடிய எல்லா வீரர்களும் சிறப்பாக செயல்படுவது எங்களுடைய அதிர்ஷ்டம். ரகானே பற்றி சொல்வதென்றால், ஒருவருடைய திறமையைப் பற்றி நமக்குத் தெரியும் பொழுது அவரை அவர் பேட் செய்யும் விதத்தில் விட்டு விட வேண்டும். சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும். அவர் விளையாடுவதற்கான சரியான இடத்தை கொடுக்க வேண்டும். அணியின் முன்னேற்றத்திற்காக யாராவது ஒருவர் தன்னுடைய இடத்தையும் தியாகம் செய்ய வேண்டியதாக இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!