என்னை எப்படி செலக்ட் பண்ணாம போறாங்கனு பாக்கிறேன்! – சுப்மன் கில் சவால்!

0
609
subhman gill

பங்களாதேஷ் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி  இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. ஒரு நாள் போட்டி தொடரை ஏற்கனவே இழந்துள்ள நிலையில் டெஸ்ட் தொடரில் 1-0  என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இன்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில்  பங்களாதேஷ் அணி 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது . அதனைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி 19 ரண்களுக்கு விக்கெட் இழப்பின்றி முதல் நாளை நிறைவு செய்தது .

கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் அரை இறுதியில் படுதோல்வி அடைந்து வெளியேறியது . இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் மீது ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன . குறிப்பாக இந்திய அணியின் தேர்வு குறித்து  ஏராளமான ஒரு விமர்சனம் செய்தனர் .

- Advertisement -

சஞ்சு சாம்சன், இசான் கிசான் மற்றும் பிரதீப் கிருஷ்ணா  ஆகியோரை அணியில் சேர்க்காததை காரணம் என்றும்  கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்தனர். இந்நிலையில்   அடுத்த வருடம் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடக்க உள்ளன.

இந்த உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்காக ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக இறங்குவது யார் என்று  கேள்விக்கு  சமீபத்தில் விடையளித்திருந்தார் ‘இஷான் கிசான்’, ஆனாலும் அவரின் இடம்  உறுதியா? என்று கூற முடியாது .. தற்போது பங்களாதேஷில் நடைபெற்று வரும்  டெஸ்ட் போட்டிகளில்  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கும் சுப்மன் கில் தான் உலகக்கோப்பை காண இந்திய அணியில் நிச்சயம் இடம் பெறுவேன் என்று  தெரிவித்துள்ளார் .

கடந்த இரண்டு மூன்று தொடர்களாகவே ஒரு நாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருபவர் ‘சுப்மன் கில்’  இவர்  இந்திய அணியின் மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே பயணத்தின் போது  சிறப்பாக விளையாடி  ‘தொடர் நாயகன் விருதை’ பெற்றார். மேலும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் இவர் பங்களாதேஷ்  தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை.

- Advertisement -

அடுத்த வருட உலகக்கோப்பை காண அணியில்  தன்னுடைய இடம் பற்றி பேசியுள்ள சுப்மன் கில்  இனி வரப் போகும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி அதிகமான ரன்களை குறித்து  நிச்சயமாக  உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவேன் என்று கூறியிருக்கிறார். தேர்வாளர்கள்  என்னை அணியில் எடுத்து ஆக வேண்டும் என்ற  சூழ்நிலையை என்னுடைய பேட்டிங்கின் மூலம்  உருவாக்குவேன் என்று  பேசியிருக்கிறார் சுப்மன் கில்.

இந்த வருடம்  12 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ள  கில்   நான்கு அரை சதம்  மற்றும் ஒரு சதத்துடன் 638 ரன்கள் குறித்துள்ளார். இவரது சராசரி 70.88  ஆகும்.